Connect with us

Cinema News

கணவருடன் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்.. போஸ் செமயா இருக்கே

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய கணவருடன் விஜயை சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படம்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இவர் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் கூட இவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள ஒரு வெப் சீரிஸின் டீசர் வெளியானது. திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று சர்வதேச யோகாதினம் என்பதால் கீர்த்தி சுரேஷ் யோகா செய்த வீடியோ மிகவும் வைரலானது. யோகாவில் கைதேர்ந்தவராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தன் கணவருடன் விஜயை போய் சந்தித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

விஜயுடன் சேர்ந்து பைரவா, சர்கார் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதிலிருந்தே இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. ஆனால் அதையும் ரசிகர்கள் வேறு மாதிரி பார்த்தனர். இருந்தாலும் அதை பற்றியெல்லாம் விஜயும் கீர்த்தி சுரேஷும் கவலைப்படவே இல்லை. தொடர்ந்து தங்கள் நட்பை வளர்த்தனர். கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்றது.

keerthysuresh

keerthysuresh

கீர்த்தி சுரேஷுக்காக விஜய் கோவாவுக்கு தனி விமானம் மூலம் சென்று அவரை வாழ்த்தினார். அடிப்படையில் விஜயின் தீவிர ரசிகை கீர்த்தி சுரேஷ். இன்று விஜய் அவருடைய 51வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு வருகிறார். அவருக்கு நேரில் சென்று தன்னுடைய வாழ்த்தை தெரிவித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தன்னுடைய பதிவில் உணர்ச்சிவசப்படுவது ஒரு திறமை, மற்றவர்களை உணர்ச்சிவசப்படுத்துவது ஒரு கலை, உணர்ச்சியாக மாறுவது ஒரு மரபு, நீங்கள் அப்படிப்பட்ட ஒரு ஆளுமை ஐயா என பதிவிட்டு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top