Connect with us

Cinema News

என்னோட ஆசையை நிறைவேற்றிய ரஜினி கமல்! கே.எஸ். ரவிக்குமாருக்கு இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா?

யாருக்குத்தான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. கஷ்டப்பட்டாலும் சொந்த வீட்டில் இருந்து கஷ்டப்பட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அந்தளவுக்கு எல்லாருடைய கனவும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். அப்படி சொந்த வீடு கனவை விளக்கும் படமாகத்தான் உருவாகியிருக்கிறது 3BHK படம். சித்தார்த் மற்றும் சரத்குமார் நடிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

படத்தில் தேவயாணி நடித்திருக்கிறார். சூர்யவம்சம் படத்திற்கு பிறகு சரத்குமாருக்கு ஜோடியாக தேவயாணி இந்தப் படத்தில் நடித்துள்ளார். படம் ஜூலை மாதம் 4 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. இந்த நிலையில் படத்தை மக்களிடம் கொண்டு போவதற்காக படக்குழு புரோமோஷனில் இறங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் படக்குழுவை பேட்டி எடுக்கும் போது கே. எஸ். ரவிக்குமார் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார்.

அதாவது கே. எஸ். ரவிக்குமார் ஆரம்பத்தில் எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அப்படி இருக்கும் போது ஒரு நிலம் விலைக்கு வந்திருக்கிறது. அந்த நிலத்தில் விலை 65 லட்சமாக இருந்ததாம். ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் அவ்வளவு தொகை இல்லையாம். அதே சமயம் படையப்பா படத்தில் கமிட் ஆகியிருந்தாராம் கே. எஸ். ரவிக்குமார்.

படையப்பா படத்திற்காக அவருக்கு சம்பளம் 60 லட்சம் பேசப்பட்டதாம். படம் ரிலீஸான பிறகு 5 லட்சம் அதிகமாக கொடுத்து மொத்தம் 65 லட்சமாக கொடுத்திருக்கிறார்கள். அந்த தொகையை வைத்து அந்த நிலத்தை வாங்கினாராம் கே.எஸ். ரவிக்குமார். அதன் பிறகு அந்த நிலத்தில் வீடு கட்ட வேண்டும். அந்த நேரத்தில்தான் தெனாலி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

அந்த நேரத்தில்தான் கமல் ரவிக்குமாரிடம் ‘ஏன் இந்தப் படத்தை நீங்களே தயாரிக்க கூடாது’ என கேட்டாராம். அதன் பிறகு தெனாலி படத்தை ரவிக்குமார் தயாரிக்க படம் வெளியாகி 3 கோடி லாபம் பார்த்திருக்கிறார் ரவிக்குமார். அந்த தொகையை வைத்து வீடு கட்டினாராம். அந்த இரு படங்களின் நியாபகமாகத்தான் வீட்டின் வெளியில் இரு வேல் வைத்து ரவிக்குமார் – கற்பகம் என்ற பெயரை வைத்திருக்கிறார். ஒரு வேல் படையப்பா படத்தில் வரும் வேலையும் இன்னொரு வேல் தெனாலி படத்தில் கமல் வைத்திருக்கும் வேலையும் குறிப்பதாக இருக்கும் என ரவிக்குமார் கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top