Categories: Cinema News latest news

kubera: குபேரா கையில தான் இருக்கு இட்லிகடையோட அமோக வியாபாரம்… ஆனா அது ஒண்ணுதான் இடிக்குது!

சேகர் கம்முலாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள குபேரா படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தில் தனுஷ் முதன்முறையாக பிச்சைக்காரன் வேடத்தில் நடித்து இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள்.

குபேரா கிட்டத்தட்ட 3 வருஷமா இந்த புராஜெக்ட் போய்க்கிட்டு இருக்கு. மணிரத்னம், ராஜமௌலி மாதிரி இயக்குனர்கள் ட்ரெண்ட்செட்டை உருவாக்குனாங்க. சேகர் கம்முலா ஒரு ஃபீல் குட் இயக்குனர். 3 மணி நேரம் 15 நிமிடம் இந்தப் படத்தோட ரன்னிங் டைம். இதுக்கு 2 இன்டர்வெல் விடணும்னு எல்லாம் ஒரு பேச்சு எழுந்தது.

இன்னைக்கு உள்ள காலகட்டத்துல என்னதான் படத்தை செதுக்கினாலும் மூணேகால் மணி நேரம் படத்துல உட்கார வைக்கிறது சோர்வை உண்டாக்கும். ஆனா இந்தப் படத்தைப் பார்த்தவங்க ஒரு நாவல் படித்த மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா இவங்களைச் சுற்றித்தான் கதை.

தனுஷைப் பொருத்தவரை ஒரு பிச்சைக்காரன். இவர் மிகப்பெரிய இடத்தில் உள்ள ஆளை எப்படி ஆட்டுவிக்கிறான்கறதுதான் கதை. மாஸ்டர் மைன்ட் உள்ள ஒரு நபர். பிளாக் மணியை மாத்துற இடம் வரைக்கும் தனுஷ் போகிறார். ஒரு சாதாரண நபருக்கு உச்சக்கட்ட பணம் வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. படத்துல ஒரு சீனைத் தூக்கினாலும் மொத்தமா தூக்க வேண்டி இருக்குமாம்.

ஒவ்வொரு சீன்லயும் டீட்டெய்ல் இருக்குதாம். இது பிளாக் மணியைப் பற்றிய ஒரு கதை. பல ரியல் லைஃப்ல உள்ள தொழில் அதிபர்கள், பண முதலைகள் கதை கூட அங்கங்கே வச்சிருக்காங்க. பல ஆயிரம் கோடி வாங்கிட்டு வெளிநாட்டுக்குப் போனாங்க. அதெல்லாம் அங்கங்கே வச்சிருக்கறதால படத்தைப் பார்க்க ஒரு ஆர்வம் வரும்.

என்ன கேரக்டர் கொடுத்தாலும் தனுஷ் தெளிவா பண்ணக்கூடியவர். அசுரன், ராஞ்சனா படங்களைப் பார்த்தாலே தெரியும். இந்தப் படம் தெலுங்குல தனுஷூக்கு பெரிய ஓபனிங் கொடுக்கும். இது ஹிட்டானா தனுஷ் நடிக்கும் தமிழ் படங்களும் தெலுங்குல பெரிய பிசினஸைத் தரும். இட்லி கடைக்கும் நல்ல பிசினஸ் அங்க கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் சுபையர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v