கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றியதன் விளைவு தான் தனுஷின் குபேரா படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருக்க காரணம் என திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டியளித்துள்ளார்.
இந்த ஆண்டு வெளியான படங்கள் தொடர்ந்து பொங்கல் பண்டிகையில் இருந்தே சொதப்பி வந்தன. அஜித் குமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் எல்லாம் வீண் முயற்சி ஆகிப்போனது. ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் மட்டுமே தியேட்டர் ஓனர்களுக்கு இந்த ஆண்டு இதுவரை நல்ல வருமானத்தையும் லாபத்தையும் பெற்றுத் தந்தது எனக் கூறியுள்ளார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ் படமா? அல்லது தெலுங்கு படமா? என்கிற குழப்பமே அந்த படத்துக்கு பெரிதாக ஓபனிங் வராததற்கு காரணம் என்கிறார்.
விக்ரம் திரைப்படம் வெளியான போது, மல்டி ஸ்டாரர் படங்களை ரசிகர்கள் விரும்புவதாக கூறிய திருப்பூர் சுப்பிரமணியம் தக் லைஃப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்றும் குபேரா படத்துக்கு கூட்டமே வராதது ஏன் என்கிற கேள்விக்கு, இந்தியா முழுவதும் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒன்றாக திரண்டு நடித்தாலும், கன்டென்ட் நல்லா இல்லை என்றால் படம் ஓடாது.
லப்பர் பந்து, வாழை, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து பெரிய நடிகர்கள் நடித்தால் தான் தமிழ் சினிமா செழிக்கும் எனக் கூறியுள்ளார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…