நாளுக்கு நாள் ஒரு படத்தின் வசூல் ஏறுகிறது என்றால் அந்தப் படம் அப்போதுதான் மக்களைச் சென்று அடைந்துள்ளது என்று அர்த்தம். சில படங்கள் லேட் பிக்கப் ஆகும் என்பார்கள். ஆனால் குடும்பஸ்தனைப் பொருத்தவரையில் சீக்கிரமாகவே பிக்கப் ஆகியுள்ளது.
கதைகளம்: இதற்குக் காரணம் கதாநாயகன் மணிகண்டன் தேர்ந்தெடுத்துள்ள கதைகளம்தான். படத்தில் அவரது நடிப்பு செம மாஸாக உள்ளது. ராஜேஸ்வர் காளிசாமி இயக்கிய இந்தப் படத்தில் மணிகண்டன், சான்வீ மேக்ஹனா, குரு சோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ளனர். யதார்த்தமான கதைக்கு என்றுமே மவுசு அதிகம்.
மணிகண்டனின் கதைத் தேர்வு: அதுவும் குடும்பம், சென்டிமென்ட், காமெடி என்று வரும்போது அனைத்துத் தரப்பு ரசிகர்களும், குறிப்பாக தாய்மார்களின் ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கும். அப்படித்தான் இந்தப் படமும் ஹிட் அடித்துள்ளது. தவிர சமீப காலமாக மணிகண்டனின் கதைத் தேர்வும் அவரது நடிப்பும் பிரமாதமாக உள்ளது என்றே சொல்லலாம். இதுவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. சரி. இப்போது கடந்த 3 நாள்களாக படத்தின் வசூல் எவ்வளவுன்னு பாருங்க.
ரீச்சாகிறது: முதல் நாள் வசூல் 1 கோடி. 2ம் நாள் வசூல் 2.2 கோடி. 3ம் நாள் வசூல் 3.15 கோடி. 4ம் நாள் வசூல் 0.81 கோடி. மொத்த வசூல் 7.16 கோடி. நாளுக்கு நாள் கணிசமாக வசூல் ஏறிக் கொண்டு இருப்பது படம் இன்னும் அதிகளவில் ரசிகர்களை சென்று ரீச்சாகிறது என்பதையே காட்டுகிறது.
ஜால வித்தைகள்: படத்தைப் பொருத்தவரை வழக்கமான கதை தான். இருந்தாலும் அதைச் சொன்ன விதம் புதுமையாக உள்ளது. படத்தில் எடுத்ததுமே சாபமா என்று நம்மை படத்தை ஒரு எதிர்பார்ப்புடன் வழக்கம் போல பார்க்க வைக்கிறார்கள். அதே நேரம் படம் முடியும்போது வழக்கம் போல சுபத்துடன் முடிகிறது. இதற்கு இடையில் இயக்குனர் என்னென்ன ஜால வித்தைகள் எல்லாம் காட்டி ரசிகர்களை இருக்கையில் உட்கார வைத்துள்ளார் என்பதில்தான் படமே நிமிர்ந்து நிற்கிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…