Connect with us

Cinema News

அவர் குக் பண்ணி நான் சாப்பிடணும்.. அதுக்காகவே அஜித்துடன் சேர்ந்து நடிக்கணும்.. யாருப்பா இந்த நடிகை?

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அமராவதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அஜித் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்து வந்தார். ஆரம்பத்திலிருந்து அவருக்கு பைக் ரேஸில் ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது. தயாரிப்பாளரும் இயக்குனருமான சோழா பொன்னுரங்கம் கூட ‘நடிப்பு என்று வந்துவிட்டால் இந்த கார் ரேஸ் பைக் ரேஸ் இதில் ஈடுபடுவதை குறைத்துக்கொள்’ என அறிவுரை கூறினாராம்.

ஏனெனில் அதில் கவனம் செலுத்தினால் ஒருவேளை ஏதாவது தவறாக நடந்துவிட்டால் அவரை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்ற வகையில் இந்த மாதிரி அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் சோழ பொன்னுரங்கம். இதை சமீபத்திய ஒரு பேட்டியில் கூட அவரே கூறியிருந்தார். அந்த அளவுக்கு சின்ன வயதில் இருந்தே அஜித்துக்கு ரேசின் மீது ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது.

சினிமாவில் ஒரு நிலையான இடத்திற்கு வந்த பிறகு ரேஸ் தவிர்த்து ரைபிள் சுடுதல், ட்ரோன் தொழில்நுட்பம் போன்றவைகளிலும் கவனம் செலுத்தி வந்தார் அஜித். அது போக அவருக்கு புகைப்படம் எடுப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. அவர் எடுத்த பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. இந்த நிலையில் அவருடைய இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் அருமையாக சமையல் செய்வார் என்பதுதான்.

அதிலும் குறிப்பாக பிரியாணி மிக அற்புதமாக சமைப்பார் என அவர் படப்பிடிப்பில் இருந்த அனைவருமே சொல்லி இருக்கின்றனர். அது மட்டுமல்ல எந்த ஒரு படப்பிடிப்பு என்றாலும் அஜித் ஒரு நாள் அங்குள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவது வழக்கமாம். ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் ஊழியர்கள் என அனைவருமே அஜித் சமையலை சுவைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை லைலா அஜித்தின் சமையலை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். லைலா மற்றும் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தீனா. ஆனால் எல்லோருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுத்த அஜித் லைலாவுக்கு எதுவுமே சமைத்துக் கொடுக்க வில்லையாம். அதனால் அஜித் மீது தான் கோபமாக இருக்கிறேன் என்று முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார் .

சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது எப்படியாவது அஜித் சமையலை நான் ருசிக்க வேண்டும். அதுக்காகவே அவருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் லைலா. எத்தனையோ நடிகைகள் அஜித் மிகவும் ஸ்மார்ட், ஹேண்ட்சம் ,அழகானவர் என்ற ஒரு காரணத்தில் கூட அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால் லைலா அவர் சமையலை எப்படியாவது டேஸ்ட் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என அந்த பேட்டியில் கூறி இருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top