Connect with us

Cinema News

6 மணி நேரம் டிராவல்.. காத்திருந்த ரசிகர்களுக்கு விபூதி அடித்த விஜய்

இன்று விஜய் தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எப்போதும் போல இல்லாமல் விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு ஸ்பெஷல் பிறந்த நாளாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் முழு நேர அரசியல் வாதியாக மாறிய பிறகு வரக் கூடிய பிறந்த நாள் என்பதால் அரசியல் ரீதியாக ஆங்காங்கே கட் அவுட்டுகள், பேனர்கள் என விஜய்க்காக அவருடைய தொண்டர்கள் ரசிகர்கள் என பிறந்த நாளை களை கட்டி விட்டனர்.

இன்னொரு பக்கம் விஜயின் தாய் ஷோபாவும் கொரட்டூர் சாய்பாபா கோவிலில் விஜய்க்காக சிறப்பு பூஜை செய்தார். 1008 சங்குகள் ஏந்தி சிறப்பு வழிபாடு செய்தார் ஷோபா. அரசியல் தலைவர்கள் சிலரும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினார்கள். இன்னொரு பக்கம் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் தெறிக்கவிட்டனர்.

இதெல்லாம் தாண்டி அவர் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சின்ன கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அந்த போஸ்டர்தான் இன்று வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சேலத்தில் இருந்து 6 மணி நேரம் பைக்கிலேயே டிராவல் செய்து விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூற வந்தார்.

ஆனால் அவரால் கடைசி வரைக்கும் விஜயை பார்க்க முடியவில்லையாம். அதனால் விஜய் வீட்டின் முன்பு அவருடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார் அந்த ரசிகர். அதாவது இரவு 11 மணிக்கு கிளம்பி காலை 6 மணிக்குத்தான் வந்தேன். நிஜமாக விஜயை வெறுத்துவிட்டேன். 2026ல் அவருடைய ஆட்சி வேண்டாம் என எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் ஒரு இரண்டு நிமிடம் வெளியே வந்துபார்த்துவிட்டு போனால் என்ன?

12.30க்கு வர்றாருனு சொன்னாங்க. வரவில்லை. 1 மணிக்கு வர்றாருனு சொன்னாங்க. வரவில்லை. காரில் போய்விட்டார் என்று சொன்னார்கள். ஆனால் உள்ளே இருந்து வருகிற எல்லா காரையும் பார்த்தாச்சு. அதில் விஜய் இல்லவே இல்லை. அவருக்கு எங்களை வந்து பார்க்க விருப்பமில்லை. அதனால் எங்களுக்கும் 2026 ல் அவரை பார்க்க விருப்பமில்லை என்று மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்திருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top