Categories: Cinema News latest news

முதல் நாளை விட 2ம் நாள் சரிந்த மதகஜராஜா வசூல்!.. வணங்கான் இப்படி ஆகிப்போச்சே!…

Madha Gaja Raja: பொதுவாக பொங்கலுக்கு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால்தான் தியேட்டர்கள் களை கட்டும். ஆனால், இந்த வருட பொங்கலுகு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், பெரிய இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து உருவான கேம் சேஞ்சர் படம் வெளியானது.

கேம் சேஞ்சர் வசூல்: இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் நன்றாக இருக்கிறது என முதல் நாள் சொல்லப்பட்டாலும், 2ம் நாளில் இருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வர துவங்கியது. 500 கோடி தில் ராஜு செலவில் தயாரித்துள்ள இந்த படம் போட்ட பட்ஜெட்டை எடுக்குமா என்றே தெரியவில்லை.ஏனெனில், படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் 100 கோடி வசூலை மட்டுமே நெருங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், முதல் நாளே இப்படம் 186 கோடி வசூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

வணங்கான் வசூல்: உண்மையான நிலவரம் என்னவென்று போகப்போக தெரியவரும். அதேபோல், பாலாவின் இயக்கத்தில் வணங்கான் அதே 10ம் தேதி வெளியானது. இந்த படத்திற்கும் பெரிய வரவேற்பு இல்லை. அருண்விஜயின் நடிப்பு பாராட்டை பெற்றாலும் படத்திற்கு பெரிய வசூல் இல்லை. 3 நாட்களில் இப்படம் 10 கோடிக்கும் கீழ்தான் வசூல் செய்திருக்கிறது. அதிலும், திங்கட் கிழமையான நேற்று இப்படம் வெறும் 54 லட்சத்தை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மத கஜ ராஜா வசூல்: அதேபோல், சுந்தர் சி-யின் இயக்கத்தில் விஷால், சந்தானம் நடித்து கடந்த 12ம் தேதி வெளியான மதகஜ ராஜா திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளில் 5 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இரண்டாம் நாளான நேற்று இப்படம் 3 கோடியை வசூல் செய்திருக்கிறது. அதாவது 2ம் நாளில் வசூல் குறைந்திருக்கிறது. சிலரோ முதல் நாள் 5 கோடி இல்லை. 3 கோடியே 10 லட்சம்தான் வசூல் என சொல்கிறார்கள்.

அதேசமயம் பொங்கலுக்கு குடும்பத்துடன் சிரித்துக்கொண்டே பார்க்க இது ஏற்ற படம் என விமர்சனங்கள் வருவதாலும், இந்த ஞாயிற்றுக்கிழமை வரை அதாவது இன்னும் 6 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதாலும் இந்த படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
சிவா