Categories: Cinema News latest news

இது வித்தியாசமான காப்பிரைட்ஸ் பிரச்சினையால இருக்கு.. ‘மகாராஜா’ படத்திற்கு இப்படியொரு சிக்கலா?

ஹீரோவாக தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த விஜய்சேதுபதிக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததுதான் மகாராஜா. இந்தப் படத்திற்கு முன்புவரை வில்லனாகத்தான் நடித்து வந்தார். எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என விஜய்சேதுபதி முயற்சியும் செய்து வந்தார். ஆனால் ஹீரோவாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. அப்படி இருந்த சூழ் நிலையில்தான் மகாராஜா படத்தின் வாய்ப்பு அவருக்கு வந்தது.

அந்தப் படத்தின் திரைக்கதை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வயதான தோற்றத்துடன் விஜய்சேதுபதி ஒரு மகளுக்கு தந்தையாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வசூலிலும் படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக காப்பி ரைட்ஸ் என்ற ஒரு பிரச்சினை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறது.

அதுவும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பிறகு காப்பி ரைட்ஸ் என்ற வார்த்தை பரவலாக பரவதொடங்கியது. இளையராஜா தன்னுடைய பாடலை தன் அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது குட் பேட் அக்லி படம் வரைக்கும் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் மகாராஜா படமும் காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது.

இளையராஜாவாவது பரவாயில்லை. ஆனால் மகாராஜா படத்தில் சலூன் கடையில் இருக்கும் ஒரு சிறுவன் இன்னொரு பட பாடலை வாயில் முணு முணுத்தப்படி இருப்பான். அவன் எப்படி தங்கள் பட பாடலை பாடலாம் என சம்பந்தப்பட்ட பட நிறுவனம் மகாராஜா படத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அது வேறெந்த நிறுவனமும் இல்லை. ஐங்கரன் நிறுவனம் தான்.

இதனால் மகாராஜா பட நிறுவனத்திற்கு ஐங்கரன் நிறுவனம் 10 லட்சம் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்களாம். ஆனால் மகாராஜா படத்தை தயாரித்த பேஷன் ஸ்டிடூயோஸ் நிறுவனம் அதெல்லாம் கொடுக்க முடியாது என சொல்லி வருவதாக தெரிகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்