கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் மகிமா நம்பியார். ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தான் இவருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். பள்ளி மாணவியாக அந்த படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார் .அதைத் தொடர்ந்து குற்றம் 23 ,மகா முனி, சந்திரமுகி 2 ,ரத்தம் உள்ளிட்ட முக்கியமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் .
குற்றம் 23 படத்தில் இவருக்கும் அருண் விஜய்க்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. நல்ல ஒரு நடிகை. ஆனால் தமிழ் சினிமா இவரை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் மகிமா நம்பியாருக்கு தமிழ் சினிமாவின் மீது தான் அதிக ஆர்வம் உள்ளது. ஏற்கனவே ஒரு பேட்டியில் மற்ற சினிமாக்களில் அவர் பட்ட அவமானங்கள் குறித்து பேசியது மிகவும் வைரலானது.
ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி இல்லை என்பது போல கூறி இருந்தார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபல ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்து நான்கு நாட்கள் படப்பிடிப்பும் போயிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அழைக்கிறோம் என கூறிவிட்டு இவருக்கு அழைப்பே இல்லையாம். உங்களுக்கு பதிலாக அந்த படத்தில் பெரிய ஹீரோயின் ஒப்பந்தமாகி இருக்கிறார் என சொல்லி இவரை நிராகரித்து விட்டார்களாம்.
இந்த மாதிரி நிறைய அவமானங்களை சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் என்றும் அந்த பேட்டியில் கூறினார். இந்த நிலையில் அவருடைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தன் செல்ல நாயுடன் பெட்டில் கட்டி புரளுவது மாதிரியான ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் மகிமா நம்பியார்.
நடிகர்களை விட நடிகைகள் தான் நாயை செல்ல பிராணியாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். திரிஷா கூட சமீபத்தில் அவருடைய நாய் இறந்ததற்கு வருத்தப்பட்டு அந்த நாயின் புகைப்படத்திற்கு மாலையெல்லாம் செலுத்தி அஞ்சலி செலுத்தியிருந்தார். அப்படி நடிகைகள் நாய்களை செல்ல பிராணியாக வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .அதில் ஒரு படி மேலாக மஹிமா நம்பியார் இந்த நாயுடன் எந்த அளவுக்கு பெட்டில் விளையாடுகிறார் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…