Categories: Cinema News latest news

அலைபாயுதே படத்தோட மணிரத்னத்துக்கு சரக்கு தீர்ந்துடுச்சு… தயாரிப்பாளர் விளாசல்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மணிரத்னம் மேல ஆடியன்ஸ் காண்டா இருக்காங்க. கமல் இனி இந்த மாதிரி கதைன்னா நடிக்கவே கூடாது என்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.

தக் லைஃப் படத்துல சொல்லிக்கிற மாதிரி எதுவுமே இல்ல. கதை வந்து ஜீரோ. தக் லைஃப் கதை அழுத்தமே இல்ல. கேங்ஸ்டருக்கு அழுத்தமான காட்சிகள் இருக்கான்னா இல்ல. சிம்புவுக்கும் கிடையாது. திரிஷாவ விபசார விடுதில இருந்து கூட்டிட்டு வர்றாரு. ஆனா ஏன் எதுக்குன்னு ஒரு காரணமும் இல்ல.

விருமான்டில நடிச்ச அபிராமிக்கு கணவனா இருக்காரு. ரொம்ப அன்னியோன்யமா இருக்காங்க. அப்படின்னா இவருக்கு வைப்பாட்டி எதுக்கு? அப்பா மாதிரி உறவுன்னா அவரு வைப்பாட்டியை சிம்பு எப்படி அழைச்சிட்டு வர முடியும்? இது ரொம்ப தப்பான கலாச்சாரம். படத்துல எந்தக் கேரக்டருமே வெயிட்டா இல்ல. எந்த இடத்துலயும் படத்துல முடிச்சு இல்ல.

அசோக் செல்வனை வாலண்டரியா நடிக்க வச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரையும் திணிச்சிருக்காங்க. கதை ஒவ்வொரு இடத்திலும் ஸ்ட்ரக் ஆகுது. படத்துல ஏ.ஆர்.ரகுமானின் 9 பாட்டு எதுவுமே படத்துல வரல. 2 பாட்டு தான் உள்ளே வருது. சின்மயி பாடுன சூப்பர் பாட்டு படத்துல இல்ல. இந்தப் பாட்டு படத்துல இல்லன்னு மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான்னு எல்லாருக்கும் தெரியும்.

அப்படின்னா புரொமோஷன்ல ஏன் அதைக் கொண்டு வந்தீங்க. இது பொய் சொல்லி ஆடியன்ஸை ஏமாத்துற டிரிக் தானே. அப்படின்னா ரசிகன் ஏமாற்றம் அடையத்தானே செய்வான். ஆடியன்ஸ் எல்லாம் ரொம்ப கோபமா இருக்காங்க. இந்த மாதிரி படம்னு தெரிஞ்சா கமல் படமே பண்ணக்கூடாது. ஆடியன்ஸ் எல்லாம் இதே மாதிரி படம் பண்ணுனீங்கன்னா பயங்கர கடுப்பாகிடுவாங்க.

மணிரத்னம் இனிமே இதே மாதிரி படம் எடுத்தா பயங்கரமா கோபமாகிடுவாங்க. அலைபாயுதே படத்தோட மணிரத்னம் கதை முடிஞ்சிப்போச்சு. அதுக்கப்புறம் எந்தப் படமாவது நல்ல படமா இருக்கா? அதுக்கு முன்னாடி மௌனராகம், அஞ்சலி, அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய் எல்லாம் நல்ல படம். எல்லாமே ஹிட்.

அலைபாயுதேக்கு அப்புறம் அவரு மனசு அலைபாய ஆரம்பிச்சிடுச்சு. அந்தப் படத்தோட அவருக்கு சரக்கு தீர்ந்துடுச்சு. ஒரே டெம்ப்ளேட். மணிரத்னம் ஒரு பிராண்ட். அது அப்படி இருந்தா தான் மரியாதை. அதுல இருந்து இறங்கினா கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v