Categories: Cinema News latest news

ரெண்டு பார்ட் எடுத்தே என்னால முடியல!.. எங்கிட்டேயே அந்த கேள்வியா?.. கோபிநாத்தை ஆஃப் பண்ண மணிரத்னம்!

தமிழ் சினிமாவில் மணிரதன்ம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் என ஏகப்பட்ட ஜாம்பவான்கள் இருந்தாலும் ராஜமெளலி, நாக் அஸ்வின், பிரசாந்த் நீல், சுகுமார் போல 1000 கோடி படத்தை ஒரு இயக்குநரால் கூட எடுக்க முடியவில்லையே ஏன் என நீயா நானா கோபிநாத் பேட்டி ஒன்றில் மணிரத்னத்திடம் கேட்டுவிட்டார்.

அதற்கு உடனடியாக நேரடி பதிலை கொடுக்காமல், இந்த நம்பர் கேமில் எல்லாம் நான் செல்ல மாட்டேன் என்றும் நாம எதுக்கு சினிமாவுக்கு வந்தோம். நல்ல படங்களை எடுக்க மட்டும் தானே, முன்பெல்லாம் புதிய படங்கள் வெளியானால், நல்லா இருக்கு, சுமாரா இருக்கு, சரியில்லை என்று படத்தின் தரத்தை வைத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் அந்த படம் அதிக வசூல் பண்ணா நல்ல படம் இல்லையென்றால் சுமாரான படம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். நான் பணத்துக்காகவோ 100 கோடி, 500 கோடி, 1000 கோடி என நம்பருக்காகவோ படம் பண்ண வரவில்லை. நான் அதை ஒரு போதும் பண்ணவும் மாட்டேன் என மணிரத்னம் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வரை வசூல் செய்த நிலையில், பார்த்திபன் உள்ளிட்டோர் அதன் 2ம் பாகம் புரமோஷனுக்கு 1000 கோடி வசூல் படம் என்று தான் அளக்க ஆரம்பித்தனர். ஆனால், பொன்னியின் செல்வன் 2 பாகங்களும் சேர்த்தே 1000 கோடி வசூலை எட்டவில்லை என்பது தான் உண்மை.

கமல்ஹாசன், சிம்புவை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்துள்ள மணிரத்னம் இந்த படமும் பெரிய அளவுக்கு வசூல் செய்யாதது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் என்கின்றனர்.

Saranya M
Published by
Saranya M