Categories: Cinema News latest news

இதான் பிரச்சினையா? குட் பேட் அக்லியில் டிஎஸ்பி இசையமைக்காததற்கு இதான் காரணமா?

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’ ஆகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம், பெரிய அளவில் வெற்றி பெற்றது. அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமான படமாகவும், முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படமாகவும் அமைந்தது.

ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக, இந்த படத்தில் ஐந்து பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இருந்தன. இதற்கெதிராக இசைஞானி இளையராஜா, ‘தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியுள்ளதாக’ புகார் எழுப்பி, படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க முன்னதாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஏற்கனவே அஜித்-தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால், ‘குட் பேட் அக்லி’ படத்திற்கும் அவர் இசையமைக்கிறார் என்ற தகவலுக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்குள் வந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்தில் இருந்து விலகியதற்கான காரணம், தயாரிப்பாளருக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடாகும் என தகவல்கள் வந்திருந்தன.

இப்போது, தேவி ஸ்ரீ பிரசாத் பேசிய ஒரு பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் அவர், “எனக்கு ஒரு நிலையான கொள்கை இருக்கிறது. அதாவது, ஏற்கனவே ஹிட்டான பாடல்களை ரீமிக்ஸ் செய்வது எனக்கு பிடிக்காது. நான் எப்போதும் புதிய இசையை உருவாக்க விரும்புகிறேன். ரீமிக்ஸ் செய்ய வேண்டிய படங்கள் வந்தாலும், நான் மறுத்துவிடுவேன். அந்த காரணத்தால் சில படங்களை நான் இழந்திருக்கிறேன். ரீமிக்ஸ் பாடல்களை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், நான் எந்த வகையிலும் ரீமிக்ஸ் பண்ண மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பெரும்பாலும் ரீமிக்ஸ் பாடல்களே இருந்ததை கருத்தில் கொண்டு, தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தில் இருந்து விலகியதற்கான முக்கியக் காரணமாக இதுவே இருக்கலாம் எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்