Connect with us

Cinema News

‘முத்தமழை’ பாடல் மிஸ்ஸான காரணம்.. மணிரத்னம் செய்த தவறு! ரஹ்மான் சொன்ன தகவல்

டிரெண்டிங்கான முத்தமழை:

முத்தமழை பாடலை படத்தில் பாடகி தீ பாடியிருந்தார். மேடையில் சின்மயி பாடி இருந்தார். அந்தப் பாடலைக் கேட்ட அனைவருமே சின்மயி வெர்ஷன் நல்லா இருந்ததா? தீ வெர்ஷன் நல்லா இருந்தது என அவரவர் விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் படத்தில் எப்படி அந்தப் பாடல் காட்சி வரப்போகிறது என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சின்மயியா? தீயா?

ஆனால் படத்தில் அந்த பாடலே வரவில்லை. இது ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது .இதற்கு ஏதாவது காரணம் இருக்குமா? அல்லது சின்மயியா தீயா என்ற ஒரு விவாதம் வேறொரு பிரச்சனையில் கொண்டு போய் முடியும் என்ற ஒரு காரணத்தினால் படத்திலிருந்து பாடலை எடுத்து விட்டார்களா என ஏகப்பட்ட கேள்விகள் இருந்து வந்தன .இதைப் பற்றி பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவருடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதாவது படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. படத்தில் வைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இருந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. படம் வெளியாகி முதல் இரண்டு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதும் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. அதில் பாடல் இல்லை என தெரிந்ததும் நிறைய பேர் வருத்தப்பட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி எழுதியிருந்தனர் .

ஜஸ்டிஸ் ஃபார் ரஹ்மான்:

அந்த சமயத்தில் ரகுமானுக்கு நான் ஒரு செய்தி அனுப்பி இருந்தேன். அதாவது அந்தப் பாட்டு படத்தில் இல்லை என அனைவருமே வருத்தத்தில் இருக்கின்றனர் என கூறி அவருக்கு செய்தி அனுப்பி இருந்தேன். அதற்கு ரகுமான் ‘சில விஷயங்கள் அப்படித்தான். படத்திற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்’ என பதிலுக்கு அனுப்பி இருந்தார். படத்தில் எது இருக்க வேண்டும் இருக்கக் கூடாது என்பதை ரகுமான் முடிவு பண்ண முடியாது .ஒரு இசையமைப்பாளராக படத்தில் இந்த பாடல் வந்தால் சந்தோஷப்பட தான் செய்வார்.

அதனால் ரகுமான் சொன்னது இதுதான். பிலிம் மேக்கிங் அவ்வளவுதான் என கூறினார். அதனால் ரகுமானுக்கு வருத்தம் இருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. எனக்கு அவர் சொன்ன பதில் அதுதான். ‘ படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக இந்த பாடலை வைக்காமல் இருந்திருக்கலாம்’ என கூறினார். பாடலை தூக்கியதும் ஜஸ்டிஸ் ஃபார் ஏ ஆர் ரகுமான் என்றெல்லாம் வர ஆரம்பித்தது.

james

james

தனிப்பட்ட வெறுப்பு:

ஆனால்அவருடைய விருப்பத்திற்கு எதிராக இதை பண்ணியிருக்க மாட்டார்கள். மணிரத்னமும் ரகுமானும் நெருக்கமான நண்பர்கள். முதல் பட வாய்ப்பை கொடுத்தது மணிரத்னம்தான். இப்போது வரை ரஹ்மானுடன் பயணம் செய்து வருகிறார் மணிரத்னம். 31 ஆண்டுகளாக பயணித்து வருகிறார்கள். அதனால் இருவருக்கும் தனிப்பட்ட பிரச்சனை என எதுவும் இருக்காது .அந்த பாடலை வையுங்கள் மணி என சொல்லி இருந்தால் மணிரத்தினம் கண்டிப்பாக வைத்திருப்பார் .

கதைக்கு முக்கியத்துவம் இருக்காது என நினைத்து கூட மணிரத்தினம் அதை வைக்காமல் இருந்திருக்கலாம். ஒரு ரசிகனாக படத்தை பார்த்த மக்கள் ஏமாந்து போயிருக்கின்றனர். இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அது தருகிறது என்றால் இது ஒரு தவறான முடிவு என்றுதான் நான் பார்க்கிறேன். ஒரு இயக்குனராக அவருடைய அனுபவத்தையும் தாண்டி ஒரு தவறு செய்து விட்டார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது .யாருக்கு வேண்டுமானாலும் சறுக்கல் ஏற்படும் அல்லவா என ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top