Connect with us

Cinema News

என்னடா பெரிய முத்தமழை… ஜில்லா விட்டு வெர்சன் தெரியுமா? பட்டையைக் கிளப்பிட்டாங்களே!

தக்லைஃப் படத்தின் முத்த மழை பாடலை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடகி தீ தீயாகப் பாடி அசத்தியுள்ளார். ஆனால் ஆடியோ வெளியீட்டில் மேடையில் சின்மயி பாடியது பேசுபொருளானது. இத்தனை நாளா இந்த குரலையா பாட வேணாம்னு சொன்னீங்கன்னு பலரும் சின்மயிக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். அந்த வகையில் படத்தில் அந்தப் பாடல் இடம்பெறாதது பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்குக் கொடுத்தது.

அதனால்தான் படம் தோல்வியாக இருக்குமோ என்று நினைத்த படக்குழு அந்தப் பாடலை நைசாக யூடியூப்பில் வெள்ளோட்டமாக விட்டுப் பார்த்தது. ஒருவேளை நல்லாருக்குன்னு சொன்னா படத்தில் சேர்த்து விடலாம் என்று நினைத்தார்களோ என்னவோ?

பாடலை விட்ட உடன் நல்லவேளை படத்தில் இதை வைக்கலன்னு சொல்லி விட்டார்கள் ரசிகர்கள். ஆனால் பாடலில் திரிஷாவின் அலங்காரமும், அபிநயங்களும் அருமையாக இருந்தன. அதை அப்படியே சும்மா விடுவார்களா நம்ம நெட்டிசன்கள். அதை எக்ஸ் தளத்தில் ஒரு ஜில்லா விட்டு வெர்சனாகவே வச்சு செய்து விட்டனர்.

ஒருவேளை மணிரத்னத்துக்குப் பதில் முத்தமழை பாடலுக்கு சசிக்குமார் இயக்குனராக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கற்பனையுடன் எக்ஸ் தளத்தில் இந்திராணியாக வரும் திரிஷா எப்படி முத்தமழைக்கு பர்ஃபார்ம் பண்ணி இருக்கிறாரோ அதையே ஜில்லா விட்டு வெர்சன் என்ற பெயரில் வேற லெவலில் கொண்டு வந்துள்ளார்கள் நெட்டிசன்கள்.

அதில் அவர்கள் போட்ட பாடல் தான் இந்திராணியாக வரும் திரிஷாவின் அங்க அசைவுகளுக்கு அப்படியே கனகச்சிதமாகப் பொருந்துகிறது. அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை… உப்பில்லாத ஆம்பளை… அவன் துப்பில்லாத ஆம்பளைன்னு திரிஷா பாடுவது போல மிக்ஸிங் செய்து தெறிக்க விட்டுள்ளார்கள்.

இந்திராணியின் கதியைப் பாருங்க… நல்லவேளை நாங்களே அதைப் படத்துல வைக்கலன்னு மணிரத்னம் சொல்லும் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது. அங்கேயே அப்படி என்றால் இங்கே இப்படியும் கலாய்க்க வேண்டுமா என்று தான் கேட்க வைத்துள்ளது இந்த முத்தமழை பாடல்.

இதற்கான வீடியோவைக் காண: https://x.com/Lavyyboi/status/1934193025586286932

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top