Connect with us

Cinema News

5 லட்சம் கொடுங்க.. வர்றேன்.. ஒரு விழாவுக்கு லட்சங்கள் கேட்கும் மிஷ்கின்

தமிழ் சினிமாவில் எளிய கதைகள் மூலம் படைப்புகளை உருவாக்கி ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் மிஷ்கின். ஏராளமான ஆங்கில நாவல்களையும் நூல்களையும் படிப்பவர். இன்னும் படித்துக் கொண்டிருப்பவர். அதில் ரஷ்ய கதை ஒன்றில் வரும் கதாபாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தன் பெயர் ஆக்கி கொண்டார். இயக்குனராக மட்டுமல்லாமல் சமீப காலமாக ஒரு மிகச்சிறந்த நடிகராகவும் மாறி இருக்கிறார் மிஷ்கின்.

இவருடைய முதல் படைப்பு சித்திரம் பேசுதடி. முற்றிலும் புது முகங்களை வைத்து இந்த படத்தை எடுத்தார். முதல் படத்திலேயே தன்னுடைய திறமை என்ன என்பதை நிரூபித்தார் மிஷ்கின். அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறினார். முதல் படத்தை விட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது .இந்த வெற்றிக்கு பிறகு நந்தலாலா என்ற படத்தை எடுத்தார் .

அதன் பிறகு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் இவரைப் பற்றி ஊரறிய பேச வைத்தது. பெரும்பாலும் அனைவருக்குமே இரவு என்பது பயமாகத்தான் இருக்கும். ஆனால் மிஷ்கினுக்கோ இரவின் மீதுதான் காதல். பெரும்பாலும் இரவை மையப்படுத்தி தான் இவருடைய கதைகள் வெளியாகி இருக்கின்றன. பிசாசு திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது.

அதற்கு போட்டி போடும் வகையாக அமைந்த திரைப்படம் தான் சைக்கோ. வன்முறைகள் நிறையவே இவருடைய படத்தில் இருக்கும். இவருக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். இவர் மேடை ஏறி பேசினாலே அது சர்ச்சையாகத்தான் போய்விடும். ஒருமையில் பேசி பேசியே தன்னுடைய மரியாதையை குறைத்துக் கொண்டது தான் மிச்சம். ஆனால் ஒருமையில் பேசினாலும் அது அன்பின் வெளிப்பாடாகத்தான் பேசுவார் மிஷ்கின்.

இந்த நிலையில் நேற்று ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த மிஷ்கின் அந்த மேடையில் பேசும்போது இனிமேல் எந்த ஒரு சினிமா விழாவுக்கும் என்னை கூப்பிடாதீர்கள். அப்படியே கூப்பிட்டாலும் ஒரு விழாவுக்கு 5 லட்சம் கொடுங்கள். நான் வருகிறேன் .அதை வைத்து என்னுடைய மகளை நான் உயர்கல்வி படிக்க வைத்து விடுவேன். ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறது.

ஒரு நாளைக்கு 5 லிருந்து ஆறு போன் கால்கள் வருகின்றன. அதுவும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நடக்கும் விழாவுக்கு இப்பொழுதே என்னை கூப்பிடுகிறார்கள். தயவு செய்து இனிமேல் யாரும் என்னை கூப்பிடாதீர்கள் என அந்த மேடையில் பேசிவிட்டு சென்றார் மிஸ்கின்.இப்படி லட்சங்கள் கொடுத்து யாரையும் கூப்பிட மாட்டார்கள். தன்னை கூப்பிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மாதிரி சொல்லியிருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top