Cinema News
வர வர ஓவர் ஆட்டம் போடும் நயன்தாரா..போனை பிடிங்கி வைத்து அட்டகாசம்
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வந்து கேரளாவில் அந்த நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார் .அதன் பிறகு தான் சினிமாவிற்கு வந்தார். முதல் இரண்டு படங்களில் ஹோம்லியான லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நயன்தாரா அதன் பிறகு வந்த படங்களில் எல்லாம் கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்தார் .
அதுவும் பில்லா திரைப்படத்தில் பிக்னி உடையில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். தனக்கும் ஸ்டைலான ஸ்வாக் இருக்கிறது என்பதை பில்லா படத்தின் மூலம் நிரூபித்தார். அதனை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் இந்த சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பிற மொழிகளிலும் கலக்கி வருகிறார் நயன்தாரா.
சமீபத்தில் தான் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதுவரை தனக்கு கொடுத்த அன்பு பாராட்டுக்கள் அனைத்தையும் நான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் என இனிமேல் அழைக்க வேண்டாம். நயன்தாரா என்று அழைத்தால் போதும் என பணிவன்புடன் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் அவரைப் பற்றிய ஒரு தகவல் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிக்க சில கண்டிஷன்கள் நயன்தாரா போட்டிருப்பதாக தெரிகிறது. ஒருநாள் முழுக்க கால்ஷீட் கொடுக்க முடியாது. நான்கு மணி நேரம் என இரண்டு நாட்கள் மொத்தம் எட்டு மணி நேரம் கால்ஷீட் கொடுக்க ஆனால் இரண்டு நாட்களுக்கு தேவையான சம்பளம் வேண்டும் என கேட்டாராம் .
அவருக்கு மட்டுமல்ல அவருடன் மொத்தமாக 25 பேர் வருகிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து இரண்டு நாள் சம்பளமாக கேட்டிருக்கிறார் .ஆனால் கடைசியில் ஒரே நாளில் முடித்து விடுகிறேன் என ஒரு நாளில் முடித்துவிட்டு இரண்டு நாள் சம்பளத்தை வாங்கிக் கொண்டாராம். ஆனால் உடன் வந்தவர்களுக்கு ஒருநாள் சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்டதாம். அதோடு இல்லாமல் இந்த விளம்பர படப்பிடிப்பில் யாரும் மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது என்ற கண்டிஷனையும் போட்டிருக்காராம் .ஆனால் அவர் மட்டும் தன்னுடன் மொபைல் போனை எடுத்துக் கொண்டு வருகிறாராம் .அதனால் இது திரை உலகில் ஒரு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.