Categories: Cinema News latest news

தக் லைப் ரிசல்ட்!.. கமலுக்கு செக் வைத்த நெட்ஃபிளிக்ஸ்.. 30 கோடி போச்சா!..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் தக் லைஃப். கடந்த 5 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் இசையில் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக விண்வெளி நாயகா பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஆனால் அந்த பாடலுக்கு ஏற்ற சூழ்நிலை காட்சிகள் தான் படத்தில் இல்லை என வருத்தம் தெரிவித்தனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை சின்மயி பாடியதன் மூலம் அந்த பாடலும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறின.படத்தின் மீது பெரிய ஹைப் இருந்தது. பொன்னியின் செல்வன் மாதிரியே இந்தப் படத்திற்கும் விடாமல் தொடர்ந்து படக்குழு புரோமோஷனில் தீவிரமாக செயல்பட்டனர். எல்லா ஊர்களுக்கும் சென்று படத்தை கொண்டு சேர்த்தனர்.

ஆனால் படம் வெளியாகி ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் சுக்கு நூறாக்கியது. ஒரு தயாரிப்பாளராக கமலுக்கு பெரிய அளவில் நஷ்டம் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். ஏனெனில் ரிலீஸுக்கு முன்பே சாட்டிலைட் உரிமம், எஃப்.எம்.எஸ் உரிமம் என பெரிய தொகை கிடைத்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் இப்போது பிரச்சினை என்னவெனில் படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால் படத்தின் சுமாரான வரவேற்பை பார்த்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் படம் வெளியாகி 28 நாள்களுக்கு பிறகு நாங்கள் ரிலீஸ் செய்துவிடுவோம் என்று சொல்லி வருகிறார்களாம். இதை கமல் ஏற்கவில்லை எனில், படத்தின் விலையிலிருந்து 30 கோடியை குறைப்போம் என்கிறார்களாம். மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று விடாபிடியாக இருந்த கமல் இந்த விஷயத்திலும் பின்வாங்க மாட்டார் என்றுதான் சொல்கிறார்கள்.

kamal

ஒப்பந்தம் கையெழுத்தானது ஆனதுதான் என்று சொல்லி ஒரே நிலைப்பாட்டில் இருந்தால் சரியாக இருக்கும். ஆனால் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அடம்பிடித்தால் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம், தியேட்டரில் படம் வரவேற்பு பெறாத நிலையில் 28 நாட்களில் படத்தை ஓடிடியில் வெளியிட கமல் அனுமதித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்