Categories: Cinema News latest news

இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தையே பாராட்டிய ரெட்ரோ இயக்குநர்!.. தக் லைஃப் படத்துக்கு சொன்ன விமர்சனம்!

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு தக் லைஃப் படம் வெற்றி பெரும் என எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இப்படத்தை பாராட்டி கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தும் தயாரித்தும் உருவான தக் லைஃப் திரைப்படம் நேற்று ஜுன் 5ம் தேதி உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், எ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படத்தில் பல பாடல்களையும் வேண்டுமென்றே மணிரத்னம் கத்தரி போட்டு விட்டார்.

அதற்கு பதிலாக சில மொக்கையான காட்சிகளை கத்தரித்து விட்டு பாடல்களை முழுமையாக இடம் பெறச் செய்திருந்தால் தான் கூட படம் பிழைத்திருக்கும் என்கின்றனர். சமூக வ்லைதளம் மற்றும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் கருத்துக்களை பெரிதாக சொல்லாத நிலையில், கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

தக் லைஃப் படத்தில் ஓஜி மணி சாரின் வைபை பல காட்சிகளில் பார்த்து சிலிர்த்துப் போய்விட்டேன் என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். மேலும், மணிரத்னம் – மாஸ்டர் ஆஃப் வின்டேஜ் கேங்ஸ்டர் டிராமா எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமல் சாரின் மாஸ்டர் கிளாஸ் நடிப்பு, சிம்புவின் வெறித்தனமான நடிப்பு மற்றும் மற்ற கதாபாத்திரங்களின் பங்களிப்பு என அனைத்தும் சிறப்பு. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவு என அனைத்துமே சிறப்பு என பாராட்டியுள்ளார்.

மேலும், நாசர், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, அன்பறிவ் என ஒட்டுமொத்த தக் லைஃப் படக்குழுவையும் பாராட்டியுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ரசிகர்கள் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தையும் இப்படித்தான் பாராட்டினார் இந்த ரெட்ரோ இயக்குனர் என கலாய்த்து வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M