Jananayagan: கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசிப்படமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒருபக்கம், விஜய் கதை கேட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் எதிர்பார்த்த முடிவு அமையவில்லை எனில் மீண்டும் அவர் சினிமாவில் நடிப்பார் என சிலர் சொல்கிறார்கள்.
விஜய் என்ன முடிவெடுப்பார் என்பது தெரியவில்லை. ஜனநாயகன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முழுவதுமாய் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மம்தா பைஜூ, பாபிதியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். துவக்கத்தில் இந்த படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டது.
ஆனால், அதன்பின் பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணா குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுக்கும் காட்சியை மட்டுமே ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தப்போகிறார்கள். மற்றபடி இது முழுக்க புதிய கதை என சொன்னார்கள். விஜய் அரசியலுக்கு சென்ற நிலையில் இந்த படத்தில் ஓட்டு போடுவது தொடர்பான விழிப்புணர்வு காட்சிகளும் படத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம், வருகிற ஜூன் மாதம் 22ம் தேதி விஜயின் பிறந்தாள் வருகிறது. பொதுவாக விஜயின் பிறந்தநாளில் அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், பாடல் வரிகள் வீடியோ, டீசர் அல்லது டிரெய்லர் வீடியோ என ஏதோ ஒன்று வெளியாகும்.
எனவே, இந்த முறையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்தமுறை அப்படி எதுவும் வெளியிட வேண்டாம் என விஜய் தரப்பில் சொல்லப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏனெனில், விஜய் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது அது டைவேர்ட் ஆக வேண்டாம் என நினைக்கிறாராம்.
ஜனநாயகன் பொங்கல் ரிலீஸ் என சொல்லப்படும் நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு படத்தை பற்றிய ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிடலாம் என விஜய் நினைக்கிறாராம். எனவே, இந்த வரும் ஜூன் 22 விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமையும் என சொல்லப்படுகிறது.
Pradeep: தமிழ்…
சின்ன வயது…
Kantara 2:…
விடுதலை 2…
Parasakthi: அமரன்…