Categories: Cinema News latest news

ஒரே படம் ரெண்டு கிளைமேக்ஸ்… இது என்ன புது பித்தலாட்டமா இருக்கு… கொலை பண்றாங்கப்பா!

Climax: சினிமாவில் ஒரு படத்தின் கிளைமேக்ஸ் தான் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆனால் தற்போது அதற்கே வேட்டு வைக்கும் விதமாக ஒரு சம்பவத்தினை படக்குழு செய்திருக்கிறது.

பொதுவாக தமிழ் சினிமாவில் சில படங்களின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை, எடிட்டிங்கால் சொதப்பி விடும். மற்ற எல்லாமே நன்றாக இருந்தால் கூட கிளைமேக்ஸ் தடுமாறி மொத்த படத்தினையுமே காலி செய்து விடும்.

கோலிவுட் சினிமாக்களில் கிளைமேக்ஸில் நெகட்டிவாக இருந்தாலே சில படங்கள் மொத்தமாக முடிந்து விடும். பிரபல ஹீரோக்களின் படங்களாக இருந்தால் கிளைமேக்ஸில் அவர்கள் இறப்பது போல காட்சி இருந்தாலே ரசிகர்கள் வெறுப்பாகி விடுவர்.

தளபதி விஜயின் நடிப்பில் புதிய கீதை திரைப்படம் கூட இதே கதையாக தான் அமைந்தது. இறுதியில் அவர் இறப்பது போல கதையுடன் படம் வெளியாக கடைசியில் ரசிகர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் கோபமாகி விட்டனர். பின்னர் ஒரு கிளைமேக்ஸ் ஷூட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இதற்கெல்லாம் இனி கவலையே இல்லை. ஒரே படத்தில் இரண்டு கிளைமேக்ஸில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் பிரபல சீரிஸான ஹவுஸ்புல்லின் ஐந்தாவது பாகம் வெளியாக இருக்கிறது. அக்‌ஷய் குமார், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக், ஜாக்கி ஷெராஃப், நானா படேகர், சோனம் பஜ்வா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கிளைமேக்ஸ் தான் தற்போது இரண்டாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹவுஸ்புல் ஏ மற்றும் ஹவுஸ்புல் பி என்ற பெயரில் திரையரங்கில் வெளியாக இருக்கும் படத்தினை ரசிகர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்து பார்த்துக் கொள்ளலாம்.

ஏ கிளைமேக்ஸில் நடக்கும் கொலை உள்ளிருக்கும் பிரபலங்களில் ஒருவர் செய்வதாக இருக்குமாம். பி கிளைமேக்ஸில் கேமியோ எண்ட்ரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் படங்கள் எல்லாமே தோல்வியாகி வருகிறது.

இந்நிலையில் வசூலை அதிகரிக்கவும் பாலிவுட்டை காக்கவும் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றனராம். இரண்டு கதை என்பதால் வசூலும் எக்கசக்கமாக உயரும் எனவும் கூறப்படுகிறது.

Published by
ராம் சுதன்