Connect with us

Cinema News

ஒன்லி ஒன்.. சூப்பர் ஒன்.. தலைவா… ரஜினிக்கு செமயா வாழ்த்து சொன்ன தனுஷ்!

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இன்று 74வது பிறந்தநாள் விழா. இந்த வயதிலும் கூட இன்னும் இளமைத்துடிப்புடன் புதுப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

கூலி

coolie

coolie

சூப்பர்ஸ்டாருக்கு வயது ஆனாலும் அவரது அந்த ஸ்டைலும், அழகும் இன்னும் குறையவே இல்லை… இப்படி படையப்பா படத்துல நீலாம்பரி டயலாக் வரும். அது உண்மை தான். படத்துல இருக்குற அதே வேகமும், நடையும், பேச்சும் நிஜ வாழ்க்கையிலும் உள்ளது. அந்த சுறுசுறுப்பு இந்த வயதிலும் இருப்பது கடவுளின் கொடை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் இப்போது கூலி படத்திலும் கூட உற்சாகமாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

திருமணம்

ரஜினி தனது மூத்த மகளான ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ்சுக்கு திருமணம் செய்து வைத்தார். அவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்று விட்டனர். ஆனாலும் ரஜினியின் மேல் உள்ள பாசம் மட்டும் என்றும் தனுஷூக்குக் குறையவில்லை.

ரஜினியைப் பொருத்த வரை விவாகரத்து விஷயத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றே சொல்லலாம். இவர் ஐஸ்வர்யா, தனுஷ் இருவரையும் சேர்த்து வைக்க பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

இரு மகன்கள்

இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள். ஆனால் அவர்கள் இது எங்களது தனி உரிமை என விவாகரத்து விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து விட்டனர். தனுஷூக்கு லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர்.

காதல் தம்பதியர்

ஐஸ்வர்யா, தனுஷ் காதல் தம்பதியர் தான். ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் 3 படத்தில் தனுஷ் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு தனு’pன் நடை, உடை, பாவனைகள் என்று அனைத்திலும் ஐஸ்வர்யா பார்த்து பார்த்து அவரை அழகுபடுத்தினார்.

ஆனால் கடைசியாக இருவரும் 2 வருடங்களுக்கு முன்பே சமூக வலைதளத்தில் நாங்கள் இருவரும் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு பாதையில் பயணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம் என்று அறிவித்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அதன்பிறகு எத்தனையோ முறை பேச்சுவார்த்தைகள் நடந்தது. கடைசியில் நீதிமன்றத்தை நாடவும் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தது. அவர்களது 20 ஆண்டு வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

தனுஷ் வாழ்த்து

மகளை விவாகரத்து செய்து இருந்தாலும் கூட ரஜினிக்கு இன்று டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் ஒன்லி ஒன் சூப்பர் ஒன் என்று குறிப்பிட்டுள்ளார். மாஸ், ஸ்டைல் ரெண்டுக்கும் என்னைக்குமே ஒரே சூப்பர்ஸ்டார். அது என் தலைவா ரஜினிதான்னு பக்காவாகக் குறிப்பிட்டு அசத்தியுள்ளார் தனுஷ்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top