நடிகை என்றாலே அழகுதான் இருக்கணும்னு அவசியமில்லை. அறிவு, திறமை இருந்தால் போது என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகை சுஹாசினி. சொல்லும் அளவுக்கு அழகு இல்லையென்றாலும் அவர் நடித்த படங்கள் எடுத்த கேரக்டர்கள் எல்லாமே சவாலான கேரக்டர்கள்தான். அதிலும் அருக்காணி கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?
இன்று வரை அவருடைய அருக்காணி கேரக்டரை வேஷம் போடாதவர்களே இல்லை என்று சொல்லலாம். நடிகையாக மட்டுமில்லாமல் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார் சுஹாசினி. அவருடைய கருத்தான பேச்சு. அது எங்கிருந்து வந்தது என அனைவருக்குமே தெரியும். கமலின் அண்ணன் மகள்தான் சுஹாசினி.அதனால் அந்த ரத்தம் இருக்கத்தானே செய்யும்.
இந்த நிலையில் பார்த்திபன் சுஹாசினிக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி என ஒரு மேடையில் பகிரங்கமாக கூறியிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் சுஹாசினி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் வெர்டிக். அந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பார்த்திபன் பேசும் போது சுஹாசினியை பற்றி இப்படி சொல்லியிருக்கிறார்.
சுஹாசினியை பற்றி பேசும்பொழுது அவர் நடிப்பை பற்றி தான் அனைவரும் பேசுவார்கள். ஒரு அழகி என்ற திமிரு இந்த உலகத்திலேயே ரொம்ப அதிகமாக உள்ளது சுஹாசினிக்கு மட்டும்தான். ‘பார்த்திபன் எனக்கு இன்னைக்கு 50 வயது பார்த்திபன்’னு போன் பண்ணி சொல்லுவாங்க. நீங்க யோசிச்சு பாருங்க. எல்லா பெண்களும் ஒரு 28 வயசுக்கு பிறகு வயசை மறைத்து விடுவார்கள்.
suhashini
சொல்ல மாட்டாங்க. 50 வயதிலேயே ஒரு பெண் 50 வயசு ஆகிவிட்டது என சொல்லனும்னா தன் திமிர் மேல எவ்வளவு பெரிய அழகு இருக்கணும். பாருடா ஐம்பது வயசிலயும் எவ்வளவு அழகாக இருக்கேன் அப்படிங்கிறது தான் இது. அந்த அளவுக்கு ஒரு தன்னம்பிக்கை மிக்க நடிகை சுஹாசினி. எனக்கு மணிரத்தினம் மீது காதல். மணிரத்தினத்துக்கு சுஹாசினி மீது காதல். அதாவது a=b, b=c அதனால் a = c. வி லவ் யூ என பார்த்திபன் சுஹாசினி பார்த்து கூறினார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…