Connect with us

Cinema News

இன்னும் நல்லா உரைக்குற மாதிரி சொல்லுங்க… மிஸ்டர் பார்த்திபன்… பலருக்கும் வாழவே தெரியலயே!

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர் பார்த்திபன். இவர் தமிழ்த்திரை உலகில் காலடி எடுத்து வைத்த முதல் படமே புதிய பாதை. இவருடைய திரையுலக வாழ்க்கைக்கும் அதுதான் புதிய பாதையைப் போட்டுக் கொடுத்தது. நக்கல், கிண்டல், நய்யாண்டி, எகத்தாளம், எடக்குமடக்கு பேச்சுக்குச் சொந்தக்காரர் என்றாலே நமக்கு இவரது நினைவுதான் வரும்.

வெற்றிக்கொடி கட்டு: குறிப்பாக வடிவேலுவை இவர் வம்புக்கு இழுக்கும் காட்சிகள் எல்லாம் மாஸ் ரகங்கள். காமெடியில் இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும். வெற்றிக்கொடி கட்டு படத்தில் பார்த்தால் இவர்களது காம்போவைப் பார்க்கும்போது விழுந்து விழுந்து சிரிக்கலாம்.

அந்த வகையில் பார்த்திபன் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய ஹவுஸ்புல் படமும் ரொம்பவே சூப்பராக இருந்தது. படம் வணிகரீதியாக பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சிறந்த கலைப்படமாக வந்துள்ளது.

பொண்டாட்டி தேவை: இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு படமும், இரவின் நிழல் படமும் டைட்டிலில் ஒரு வித்தியாசத்தைக் கொண்டு வந்திருக்கும். அதே போல குடைக்குள் மழை, உள்ளே வெளியே, பொண்டாட்டி தேவை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய படங்களிலும் இதைக் கவனிக்கலாம்.

கிறுக்கல்கள்: பார்த்திபன் படத்தில் மட்டும் இல்லாமல் படவிழாக்களிலும் அழைப்பிதழ் கொடுக்கும்போது புதுமையாகவே சிந்திப்பார். இவர் தனது கவிதைத் தொகுப்புக்குக் கூட கிறுக்கல்கள் என்று பெயர் வைத்துள்ளார். இவ்வளவு விவரமான பார்த்திபன் பலருக்கும் எப்படி வாழறதுன்னு தெரியல.

எதற்கெடுத்தாலும் பயம்: ஏதோ ஏனோ தானோன்னு நாள்களைக் கடத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டார் போல. சிலர் வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அடுத்தவர்களை எப்போதும் அனுசரித்துக்கொண்டே இருப்பார்கள். தற்போது அவர்களுக்காகவே ஒரு அருமையான தத்துவத்தை உதிர்த்துள்ளார். வாங்க என்னன்னு பார்க்கலாம்.

நமக்கு தெரியாது: எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கற மாதிரி எல்லாருக்கும் அவங்க மேல நம்பிக்கை வர மாட்டேங்குது. பயந்து பின்னாடி போறதுனால யாரு எண்மையான தோல்வியை சந்திக்கிறது. நீங்கதானே. தைரியமாக இருந்தால் அடுத்த படியிலே வெற்றி இருக்கலாம். அது நமக்கு தெரியாது.

வாழ்க்கை இருக்கு: நீ ஒடஞ்சி பின்னாடி போயிட்டனா கண்டிப்பா நீ தோல்வி அடைந்து விடுவாய். அடுத்த நிமிஷத்தை நீ தோல்வி கிட்ட கொடுக்க வேண்டாம். இன்னமும் வாழ்க்கை இருக்கு. அதை யாரு வாழ்றது நீதானே வாழணும். அதனால்தான் எனக்கு நானே நம்பிக்கை கொடுத்திட்டு போயிட்டு இருக்கேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top