Categories: Cinema News latest news

எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு?.. விஜயை பத்தி இப்படி சொல்லிட்டாங்களே பூஜா ஹெக்டே!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது வரை இவரின் திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கின்றது. இவரை வைத்து படம் செய்வதற்கு நீ, நான் என்று பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் திடீரென்று அரசியலில் குதித்து இருக்கின்றார்.

தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து தனது கட்சியின் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையுமே மிகச் சிறப்பாக செய்து முடித்தார். அது மட்டுமில்லாமல் தற்போது சினிமாவிலும் பிஸியாக நடித்து வரும் நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக கூறியிருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்கி வருகின்றார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் தனது கட்சி வேலைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் விஜய். அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றார். அதற்கு ஏற்ற வகையில் கட்சி தொடர்பான பல அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. தற்போது மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் நடிகர் விஜய் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார்.

ஒரு பக்கம் கட்சி வேலைகள், மற்றொரு பக்கம் சினிமா என இரண்டிலும் முழு கவனம் செலுத்தி வரும் நடிகர் விஜயின் அரசியல் வருகை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் அவரின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இனிமேல் நடிகர் விஜயை திரையில் காண முடியாது என்கின்ற வருத்தம் பலருக்கும் இருக்கின்றது.

அதே வருத்தம் நடிகை பூஜா ஹெக்டேவுக்கும் இருந்திருக்கின்றது. நடிகர் விஜயுடன் ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தற்போது ஜனநாயகன் திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த பூஜா ஹெக்டே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து பேசியிருந்தார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக அவரை இனிமேல் திரையில் காண முடியாது என்கின்ற வருத்தம் எனக்கு அதிக அளவில் இருக்கின்றது. இருப்பினும் அவரின் இந்த முடிவுக்கு நான் மதிப்பளிக்கின்றேன். நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற அவரின் முயற்சிக்கு எப்போதும் எனது ஆதரவு இருக்கும். மேலும் அவரின் கடைசி திரைப்படத்தில் அவருடன் நானும் நடித்திருக்கின்றேன் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது’ என்று கூறி இருக்கின்றார்.

Published by
ramya suresh