Connect with us

Cinema News

ஏர்போர்ட்டில் இருந்து வீல் சேரில் அழைத்துவரப்பட்ட பிரியங்கா.. ஃபேன்ஸ் என்ன பண்ணாங்க தெரியுமா?

நம்பர் ஒன் தொகுப்பாளினி:

விஜய் தொலைக்காட்சியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. சின்னத்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை சொல்லலாம். அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு இருக்கிறார்கள். தன்னுடைய நகைச்சுவையான பேச்சுகளாலும் குறும்புத்தனமான உடல் பாவனைகளாலும் ரசிகர்களை மிகவும் ஈர்க்க கூடியவர்.

விஜய்டிவிக்கு தேவை:

மேடைக்கு இவர் வந்தாலே கைதட்டல்கள் தான். யார் எப்பேர்ப்பட்ட பெரிய நபர் என்று கூட பார்க்காமல் சகட்டு மானக்கி அனைவரையும் கிண்டல் செய்து அதிலிருந்து கண்டண்டை எடுத்து அந்த நிகழ்ச்சியையே மிகவும் கலகலப்பாக மாற்றக்கூடியவர். இவரை சுற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் விஜய் டிவிக்கு இவர் மிகவும் தேவை என்கிற ஒரு எண்ணத்தை இவருடைய உழைப்பின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.

ம.க.பா காம்போ:

ரசிகர்களும் ஏதாவது ஒரு ஷோவில் பிரியங்கா இல்லை என்று சொன்னால் அடுத்த நிமிஷமே ஜஸ்டிஸ் ஃபார் பிரியங்கா என்று ஹேர் ஸ்டைக்கை ஆரம்பித்து ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள். அப்படி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ம.கா.ப – உடன் சேர்ந்து பிரியங்கா தொகுத்து வழங்குவது அந்த நிகழ்ச்சியையே கலகலப்பாக்கி விடும்.

வீல்சேரில் பிரியங்கா:

இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய ஒரு வீடியோ வெளியானது. அதில் தன்னுடைய காலில் கட்டுப்போட்டு நின்ற மாதிரி அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இப்போது வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கும் பிரியங்காவை ஏர்போர்ட் ஊழியர்கள் வீல் சேரில் உட்கார வைத்து அழைத்து வருகின்றனர். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது .

அவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ரீசண்டாக விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக். அந்த நிகழ்ச்சி இப்போதுதான் ஆரம்பித்திருந்தார் பிரியங்கா. அதற்குள் இவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாதபடி ஆகிவிட்டது. எத்தனையோ ஃபேன்ஸ் இவருக்கு இருந்தாலும் இவருடைய இந்த வீடியோவை பார்த்து கமெண்ட்களில் கிழி கிழியென கிழித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த அகமதாபாத் நிகழ்வை ஒப்பிட்டு எத்தனையோ உயிர்கள் போய்க் கொண்டிருக்கின்றது. இதெல்லாம் ஒரு செய்தியா என போட்டு வருகின்றனர். இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.


author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top