Connect with us

Cinema News

பாலாவுக்கும் மிஷ்கினுக்கும் எதுவுமே தெரியாது!.. குளிக்கிற சீனில் எதுக்கு? – தயாரிப்பாளர் தாக்கு!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையேயான உரையாடல்களையும், படத்தை தயாரிப்பதில் இருக்கும் சிக்கல்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. அந்த வரிசையில், தற்போது இயக்குனர்கள் பாலா மற்றும் மிஷ்கின் பற்றி விமர்சித்துள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காதல் ரோஜாவே, நிலா போன்ற படங்களின் தயாரிப்பாளராக பாலாஜி பிரபு பணியாற்றியுள்ளார். இவர் தயாரித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. அதை தொடர்ந்து சமீப காலமாக தமிழ் நடிகர்கள் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவதால் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், முன்னணி நடிகர்களும் ஆரம்பத்தில் தமிழ் தயாரிப்பளர்களுடன் பணியாற்றிய பின்பு வெளிமாநில தாயாரிப்பாளர்களுடன் இணைவதையும், நடிகைகளுக்கு பணத்தின் மீது இருக்கும் ஆசை என சர்ச்சைக்குறிய விதமாகவே பேட்டியளித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது பாலாவும் மிஷ்கினும் என்ன படம் எடுக்குறாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. மிஷ்கின் படத்துல சுடுகாட்ல நாய் ஊளையிடும், பாலா படத்துல ஹிரோ எவ்ளோ அழகா இருந்தாலும் அவங்களுக்கு மொட்ட அடிச்சு, முடியை கட் பண்ணி, காத கட்டி விட்டு, சிரிக்கும் போது பல்லு அழகா இருந்தா பல்லுக்கு கருப்பு கலர் அடிக்க சொல்லி ஹீரோவ எவ்ளோ அசிங்கமா காட்ட முடியுமோ அந்த அளவிற்கு காட்டுவார்.

பாலா இயக்கிய வணங்கான் படத்தில் அருண் விஜய் ஒரு மாற்றுத்திறனாளியா காமிச்சிருக்காரு, சும்மாவே அவர பாக்க முடியாது, இதுல காது கேக்காது, வாய் வேற பேச முடியாது என அருண் விஜய்யின் கதாபாத்திர வடிவமைப்பையும் கிண்டலாக பேசியுள்ளார். மேலும், அப்படத்தில் கண்கள் தெரியாத பெண்கள் குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கும் காட்சிகளை எல்லாம் எதுக்கு அவ்வளவு ஆபாசமாக எடுக்கணும். எல்லா இயக்குனர்களும் இப்படி எதையாவது செய்து தான் படத்தை ஹிட்டாக்க வேண்டும் என முடிவுசெய்து விட்டார்கள், ஆனால், ரசிகர்களுக்கு எது நல்ல படம் எது மொக்கைப் படம், எதை ஓட வைக்கணும்னு நல்லாவே தெரியும் என பாலாஜி பிரபு விமர்சித்துள்ளார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top