Categories: Cinema News latest news

மோகன்பாபு கோபக்காரர்… ரஜினிக்கே அதிர்ச்சிதான்.. சௌந்தர்யா மரண பின்னணியை அலசும் தயாரிப்பாளர்

பொன்னுமணி படத்துல நெஞ்சுக்குள்ள இன்னாரென்று என்ற பாடலில் கார்த்திக் சௌந்தர்யாவைத் தோளில் தூக்கியபடி ஆடுவார். முதல் படத்திலேயே அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார். தவசி படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினியுடன் படையப்பா, அருணாச்சலம், கமலுடன் காதலா காதலா படத்தில் நடித்துள்ளார்.

விஜயகாந்துடன் அவர் இணைந்து நடித்த சொக்கத்தங்கம்தான் அவரது கடைசி படம். எந்த கிசுகிசுவிலும் அவர் சிக்காதவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 50 படங்களில் நடித்துள்ளார். அந்தக்காலத்தில் அவரது திடீர் மறைவு தமிழ்சினிமா உலகையே அதிரச் செய்தது. ஆனால் இப்போது அவரது மரணம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த விபத்துல சௌந்தர்யா இறந்ததா சொல்றாங்க. அது விபத்தே கிடையாது. திட்டமிட்டு நடந்த சதி என்றும் பேசப்படுகிறது. இதுகுறித்து. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

ஆந்திராவுல மோகன்பாபு சூப்பர்ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருப்பவர். அவரைப் பற்றி சிட்டிமல்லு என்ற சமூக ஆர்வலர் காவல்நிலையத்துல ஒரு புகார் கொடுத்துள்ளார். சௌந்தர்யா 2004ல்தான் ஹெலிகாப்டர் விபத்துல இறந்தார். அவர் உயிரோடு இருந்தபோது அவருக்கு 100 கோடி மதிப்பில் சொத்து இருந்தது. அது 6 ஏக்கர் நிலம். அதை எனக்குக் கொடுத்து விடு என நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கு சௌந்தர்யா மறுத்துள்ளார்.

அரசியல் சார்ந்த நெருக்கடி என்றும் சொல்லப்படுகிறது. சௌந்தர்யாவை பிரசாரம் பண்ண சொன்னாங்களாம். அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அவருக்குத் தனி ஹெலிகாப்டர் ஒன்றை அரேஞ்ச் பண்ணி இருக்கிறார்கள். அவருடன் அவரது அண்ணன் அமர்நாத்தும், இரு நண்பர்களும் இணைந்து பயணிக்கின்றனர்.

லேண்ட் ஆக வேண்டிய அந்த ஹெலிகாப்டர் திடீர்னு கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி விடுகிறது. இது எப்படி நடந்தது? இது விபத்தா? திட்டமிட்ட சதியா என்ற கேள்வி அப்பவே எழுந்தது. சௌந்தர்யாவிடம் கேட்ட அந்த சொத்து இப்போ மோகன்பாபுவிடம் உள்ளது. அவர் கெஸ்ட் ஹவுஸ் கட்டிவிட்டார். இது எப்படி அவருக்குக் கிடைத்தது? சௌந்தர்யா அந்த சொத்தைக் கொடுக்காததால்தான் மோகன்பாபு திட்டமிட்டு அவரைக் கொலை செய்துவிட்டார்னு புகார் கொடுத்துள்ளார் சிட்டிமல்லு.

ரஜினியும், மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள். மோகன்பாபு இயல்பிலேயே முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர். இந்தப் புகார் உண்மையா? பொய்யான்னு யாருக்கும் தெரியாது. இந்த சிட்டிமல்லு ஏன் 20 வருஷமா பேசாம இப்ப பேசுகிறார்னும் கேள்வி எழுகிறது.

இதன்பின்னணியில் மோகன்பாபுவின் மகன் மனோஜ்பாபுதான் சிட்டிமல்லுவை ஏவி விட்டாரா என்றும் சந்தேகம் எழுகிறது. ஏன்னா முதலில் மோகன்பாபுவுக்கம் அவரது மகன் மனோஜ்பாபுவுக்குமே தகராறு ஏற்பட்டதாம். சிட்டிமல்லு கொடுத்த புகாருக்கு ஆதாரம் இருந்தால் தான் அந்த வழக்கையே எடுத்து விசாரிப்பார்கள். ஆனால் என்னோட கருத்து இது திட்டமிட்ட சதி மாதிரி தெரியல. பைலட் அந்த ஹெலிகாப்டரை செக் பண்ணாமலா இருந்துருப்பாரு? இதுல எதுவும் உள்நோக்கம் இருக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார் பாலாஜி பிரபு.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v