Connect with us

Cinema News

மூத்த நடிகரா இருந்து இப்படி பண்ணலாமா? சின்மயி விஷயத்தில் ராதாரவியின் அராஜகமா இது?

ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களும் சின்மயி குரலுக்கு ரசிகர்களாக மாறினார்கள். அவருடைய குரல் அனைவரையும் கிறங்கடித்து விடும். சமீபத்தில் கூட தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் முத்தமழை பாடலை பாடியதன் மூலம் அவரது குரலை உலகெங்கும் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். படத்தில் அந்தப் பாடலை பாடியவர் பாடகி தீ.

ஆனால் சின்மயி வெர்ஷன் வரவேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் சின்மயி மீண்டும் டிரெண்டிங்காகி வருகிறார். தமிழில் அவர் பாடுவதற்கும் டப்பிங் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏன் லியோ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்ததன் மூலம் எப்படி அவர் குரல் கொடுக்கலாம் என சின்மயிக்கு எதிராக டப்பிங் யூனியனிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

அப்படி என்ன நடந்தது என்று பார்த்தோமானால் டப்பிங் யூனியனுக்கு ஆண்டுச்சந்தா என்ற அடிப்படையில் ரூ 250 கட்ட வேண்டுமாம். ஆனால் சின்மயி அதை கட்டவில்லையாம். அதனால் அவரை டப்பிங் யூனியனிலிருந்து தூக்கிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இதை பற்றி ராதாரவியிடம் ‘கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறார். ஏராளமான பாடல்களையும் பாடியிருக்கிறார்’

‘அவர் மூலம் டப்பிங் யூனியனுக்கு 10 சதவீதம் கமிஷன் வருகிறது. அதனால் லட்சம் லட்சமாக டப்பிங் யூனியனுக்கு வருமானம் வருகிறது. இப்படி லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் சின்மயினால் ஒரு 250 ரூபாய் கட்ட முடியாதா’ என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதோடு அவருக்கு வரும் வருமானத்தில் இருந்து கூட அந்த ஆண்டுச்சந்தாவை கழிச்சிருக்கலாமே? சின்மயி தரப்பில் இருந்து கேட்கும் கேள்வி என்னவென்றால் சுருதிஹாசனுக்கு டப்பிங் யூனியனிலிருந்து கட்டுகிறார்கள். விஜய்க்கும் கட்டுகிறார்கள். பாடகர் கார்த்திக்கும் கட்டுகிறார்கள். ஏன் எனக்கு மட்டும் கட்டவில்லை என்பதுதான் சின்மயி கேள்வி.

இதை பற்றி ராதாரவி பேசும் போது ‘பிரச்சினைகளோடு நீ போய்விட்டால் என்றால் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உள்ளே வா என்று சொல்கிறோம். அவ்வளவுதான்’ என கூறினார். டப்பிங் யூனியனில் சின்மயிக்கு சண்டை எனும் வரும் போது நீ டப்பிங் யூனியனிலேயே இருக்கக் கூடாது. நீ எங்கேயும் பாடவும் கூடாது. பேசவும் கூடாது என சொல்லி அவருடைய திறமையை ஒடுக்கி தூக்கிப் போடுவது அராஜகம் இல்லையா என்றும் ராதாரவியிடம் கேட்கப்பட்டது.

chinmayi

chinmayi

அதற்கும் ராதாரவி டப்பிங் யூனியனை பற்றி உங்களுக்கும் இன்னும் சரியாக தெரியவில்லை. அதை பற்றி பேச வேண்டுமென்றால் ஒன்றரை வருஷம் ஆகும். அதோடு உங்க கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஏனெனில் வெளிப்படையாக சொல்கிறேன். இதெல்லாம் வேஸ்ட் டாப்பிக்காக நான் நினைப்பேன் என்று கூறி அந்த பேட்டியை முடித்துக் கொண்டார் ராதாரவி.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top