Connect with us

Cinema News

என்ன வேணா சொல்லுங்க!.. சிவாஜிக்கு அப்புறம் விஜய்தான்!.. ராதிகா சொல்றத பாருங்க!…

நடிகர் விஜய் பற்றி ராதிகா கூறியுள்ளதை பார்ப்போம்..

Actor vijay: சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் விஜய். இவரின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய சில படங்களில் சிறு வயது விஜயகாந்தாகவும் நடித்திருக்கிறார். கல்லூரி படிப்புக்கு பின் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார் விஜய். ஆனால், அதில் எஸ்.ஏ.சிக்கு விருப்பமில்லை.

ஆனாலும் விஜய் அடம்பிடிக்க நாளைய தீர்ப்பு படம் மூலம் அவரை அறிமுகம் செய்தார். அதன்பின்னரும் சொந்த தயாரிப்பில் ரசிகன் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து இயக்கினார். அந்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தது. அதன்பின்னரே விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படத்தில் நடித்தார்.

இது விஜய் மீதிருந்த இமேஜை மாற்றியது. அதன்பின் துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் விஜய்க்கு ரசிகர்களை கொண்டு வந்ததது. கில்லி படத்தின் மெகா வெற்றி விஜயை பெரிய ஸ்டாராக மாற்றியது. ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கி லியோ வரை அது தொடர்கிறது.

விஜய் தனது திரையுலகில் ரஜினியையே பின்பற்றினார். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து பின்னர் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறி இப்போது மாஸ் நடிகராகவும் மாறி இருக்கிறார். ரஜினியை போலவே இவருக்கும் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. உடல் மொழிக்கு அவர் சில படங்களில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை பின்பற்றினார் என சிலர் சொல்வார்கள்.

இந்நிலையில், விஜய்க்கு அம்மாவாக சில படங்களில் நடித்த ராதிகா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘முன்பெல்லாம் புதிதாக நடிக்க வரும் நடிகர்கள் சிவாஜியை போல நடிக்க முயற்சி செய்வார்கள். இப்போது எல்லோரும் விஜயின் ஸ்டைலை பின்பற்ற நினைக்கிறார்கள். எல்லோருக்கும் விஜயை போல வர வேண்டும் என்கிற ஆசைதான் அதற்கு காரணம்’ என சொல்லி இருக்கிறார்.

விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுவே விஜய் நடிக்கும் என கடைசிப்படம் எனவும் சொல்லப்படுகிறது. அதன்பின் அவர் தீவிர அரசியலில் செயல்படவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top