Categories: Cinema News latest news

அந்த படத்த முடிச்சிட்டு சினிமாவை விட்டே போகும் ராஜமவுலி!..

ராஜமௌலி என்றதும் நம் நினைவுக்கு சட்டென்று வருவது பாகுபலி தான். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பிரம்மாண்டத்தை நாம் மறந்துவிட முடியாது. அதன் இரு பாகங்களுமே நம்மை மிரட்டி விட்டன. இந்தப் பாகுபலி அரண்மனை இன்னும் ஒரு கண்காட்சியாகவே வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கூட நெல்லையில் பாகுபலி அரண்மனை போன்று செட்டிங் போட்டு கல்லா கட்டி வருகிறார்கள். அந்த வகையில் படங்கள் வருவது ரசிகர்களுக்கு விருந்து தான். இப்போது இவரைப் பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது. வாங்க பார்க்கலாம்.

ராஜமௌலி மகேஷ்பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அது 2026ல் தான் ரிலீஸ். ராஜமௌலியைப் பொருத்தவரை மார்க்கெட்டிங்கில் அவர் பெரிய கில்லாடி. தூள் கிளப்பிவிடுவார்.

இந்தப் படத்தை முடித்து விட்டு மகாபாரதத்தைப் படமாக்கப் போகிறாராம். இது எல்லாருக்கும் தெரிந்த கதை தானே. இதை எப்படி புதுசா எடுக்கப் போகிறார்னு கேட்கலாம். ஆனா மேக்கிங்கில் மிரட்டி விடுவார். இந்தப் படத்தை 3 வருஷமாக எடுக்கப் போகிறாராம். 2027ல் ஆரம்பித்து 2030ல் தான் ரிலீஸ் என்கிறார்கள். இந்தப் படத்திற்கு அவர் மெனக்கிடப்போறதைப் பார்த்தால் 2032 ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவ்வளவு பெரிய படம் எடுத்துட்டு தான் நினைச்சதை சாதித்து விட்டோம் என்று இந்தப் படத்துடன் சினிமாவை விட்டே விலகப் போகிறாராம். ஆனால் இதை எல்லாம் நம்ப முடியுமா? மகாபாரதம் என்ற படத்தை எடுத்தாலே அவருக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். வருமானமும் பல மடங்கு கிடைக்கும்.

அதன்பிறகு ஓய்வு எடுப்பார் என்று சொல்ல முடியாது. அந்தளவு வயதும் ஆகவில்லை. அதே நேரம் இந்தப் படம் அவருக்கு ஒரு தன்னிறைவைக் கொடுக்கும்பட்சத்தில் ஓய்வு எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாகுபலி ஒரு கற்பனைக் கதை. அதற்கு போட்ட எபெக்டே நம்மை வாயைப் பிளந்து பிரமிக்க வைத்தது. மகாபாரதம் ஒரு இதிகாசப்படம். படத்திற்கு எவ்வளவு பொருள்செலவு ஆகும்? படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்டுகள் நம்மைத் திக்குமுக்காடச் செய்து விடும். இப்படி எல்லாம் எடுக்க முடியுமா என்று ராஜமௌலி வியக்க வைப்பார் என்பது மட்டும் உறுதி.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v