Connect with us

Cinema News

‘கண்ணப்பா’ படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி! கேக் வெட்டி கொண்டாடிட்டாரே

கண்ணப்பா: தெலுங்கு உலகில் ரஜினிக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருப்பவர் நடிகர் மோகன் பாபு. இவருடைய மகன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் கண்ணப்பா. இந்த படத்தை தற்போது ரஜினிகாந்த் தன் குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்து பட குழுவை வாழ்த்தியிருக்கிறார் .கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பெத்த ராயுடு. இந்த படம் தெலுங்கு திரை உலகில் மிக முக்கிய திரைப்படமாக மாறியது.

கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி:

இந்த படம் வெளியாகி 30 வருடம் ஆன நிலையில் முப்பதாவது வருடத்தை கொண்டாடும் விதமாக மோகன் பாபு மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சந்தித்துக் கொண்டு அவர்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தப் படத்தில் பெத்தராயுடுவாக மோகன்பாபுவும் பாப்ப ராயுடுவாக ரஜினியும் நடித்திருப்பார்கள்.அதே நாளில் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் வரும் 27ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் கண்ணப்பா. அந்த படத்தையும் ரஜினிகாந்த் தன் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் இணைந்து பார்த்தார்.

பிரம்மாண்ட நட்சத்திரங்கள்:

கண்ணப்பா திரைப்படம் உலகம் முழுவதும் பழமொழிகளில் வெளியாக இருக்கின்றது. இந்திய சினிமாவில் ஒரு பிரம்மாண்ட காவியமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மோகன்லால் ,மோகன் பாபு, பிரபாஸ், அக்ஷய் குமார், சரத்குமார், காஜல் அகர்வால் என பிரம்மாண்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். படத்தை பார்த்து ரஜினிகாந்த் சூப்பர் சூப்பர் என சொல்லி இருக்கிறார் .

ரஜினி சொன்ன வார்த்தை:

அவருடைய மனைவி லதாவும் படத்தை பார்த்துவிட்டு நம்முடைய கலாச்சாரத்துக்கு அர்ப்பணிக்கும் ஒரு படமாக இது இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதில் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்றும் தெரிகிறது .எந்த ஒரு படம் ரிலீஸ் ஆனாலும் அதை பார்த்துவிட்டு ரஜினி சொல்லும் ரிவ்யூக்காக அனைவருமே காத்திருப்பார்கள்.

இந்த படத்தை பார்த்து ரஜினி சொன்ன அந்த வார்த்தையை கேட்டு ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்த நிலையில் ரஜினி பார்த்துவிட்டு அவருடைய கருத்தை சொன்னதும் இன்னும் இந்த படத்தின் மீது பெரிய அளவு ஹைப் அதிகரித்து இருக்கிறது.


author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top