Connect with us

Cinema News

ஆல் டைம் ரெக்கார்டு.. ப்ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பிய ரஜினியின் படங்கள்

ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர்கான் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர். படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. வரும் 25 ஆம் தேதி இந்தப் படத்தின் ஒரு அப்டேட் வருவதற்கும் வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட 15 உடன் ரஜினி இந்த சினிமாவிற்கு எண்ட்ரி ஆகி 50 வருடங்கள் ஆகப்போகின்றது. அதனால் இந்த வருடம் ரஜினிக்கு ஒரு மறக்க முடியாத வருடமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 1975 ஆம் ஆண்டு பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரஜினி. அதிலிருந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக இந்த சினிமாவில் ஒரு பெரிய ஆளுமையாக பார்க்கப்படுகிறார்.

ஆரம்பத்தில் துணை நடிகர், வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த ரஜினி பைரவி என்ற படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகமானார். அவரை ஹீரோவாக்கி பார்த்தவர் கலைஞானம். அந்த நன்றிக்கடனுக்காக கலைஞானத்துக்கு ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார் ரஜினி. அதிலிருந்து இன்றுவரை ரஜினியின் கோட்டையை யாராலும் தகர்க்க முடியவில்லை.

ஏன் இப்போதுள்ள இளம் தலைமுறை நடிகர்களால் கூட ரஜினியை நெருங்க முடியவில்லை. அவரின் ஒவ்வொரு படங்கள் ரிலீஸாகும் போதும் அந்தப் படங்களுக்கு என்று பெரிய ஹைப் உருவாகி விடுகின்றது. ரிலீஸுக்கு முன்பே ப்ரீ ரிலீஸிலும் சாதனை படைத்து விடுகிறது. அந்த வகையில் கூலி திரைப்படம் ஓவர்சீஸில் ப்ரீ ரிலீஸில் 90 கோடி வரை விற்றுவிட்டதாக ஒரு தகவல் வந்திருக்கிறது.

கூலி திரைப்படத்திற்கு முன் ரஜினி கபாலி படம் ப்ரீ ரிலீஸில் 34 கோடியும் பேட்ட திரைப்படம் 34.5 கோடியும் தர்பார் திரைப்படம் 35 கோடியும் 2.0 திரைப்படம் 60கோடியும் லாபம் பார்த்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு ஆல் டைம் ரிக்கார்டாகவும் பார்க்கப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top