Categories: Cinema News latest news

ஓட்டலுக்குச் சென்ற ரஜினி… ஏளனமாகப் பார்த்த சப்ளையர்… அடுத்து நடந்த அதிசயம்!

சூப்பர்ஸ்டாரின் இந்த அளவு அசுர வளர்ச்சிக்குக் காரணம் அவரது எளிமை தான். சினிமாவில் நடிக்க வரும்போது பல அவமானங்களை சந்தித்தார். கருப்பா இருக்குறவன் எல்லாம் ஹீரோவா ஆக முடியாது என்ற இலக்கணத்தை உடைத்தார். ஸ்டைல் என்ற ஒரு மேஜிக்கைக் கொண்டு இன்று வரை தமிழ்சினிமா உலகை மட்டுமல்ல.

இந்தியத் திரை உலகையே ஆட்டிப் படைத்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்த வயதிலும் லோகேஷ் கனகராஜ் உடன் கூலி, நெல்சனுடன் ஜெயிலர் 2 என ஓய்வின்றி நடித்து வருகிறார். ஆனால் அவர் எவ்வளவு எளிமையானவர் என்பதை இந்த சம்பவம் மூலம் பார்;க்கலாம்.

ரஜினியைப் பற்றி தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் ஒரு விஷயம் சொல்றாரு. ஒரு முறை இமயமலைக்குப் போறாரு ரஜினி. அப்போ ஒரு நாள் இந்தியாவின் வடகோடியில் இருக்குற ஒரு கிராமம். அங்கு ஒரு ஓட்டல் இருக்கு. பெரிய பெரிய பணக்காரங்க எல்லாம் அங்கு சாப்பிடப் போறாங்க. ரஜினி சன்னியாசி வேடம். ஜோல்னா பை. தாடின்னு வர்றாரு.

சப்ளையர் அவரை ஏளனமா பார்க்குறாங்க. மற்ற எல்லாருக்கும் சப்ளை பண்றாங்க. எல்லாரையும் கவனிக்கிற அவங்களைப் பார்த்ததும் ரஜினி மெல்லிய புன்னகையோடு கீழே பார்க்குறாரு. யாரும் நம்மைக் கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு. ஆனா அவங்க இவரு ஒரு சன்னியாசி. இவருக்கிட்ட ரூபா இருக்குமா இல்லையாங்கற கண்ணோட்டத்துல பார்க்குறாங்க. கடைசியா ஒரு சப்ளையர் வந்து என்ன வேணும்னு கேட்குறாரு.

அப்போ ரஜினி ஒரு லிஸ்டையே படிக்கிறாரு. அதைக் கேட்டதும் சந்தேகம் அதிகமாகி சப்ளையர் உங்கிட்ட பணம் இருக்கான்னு கேட்குறாரு. எடுத்துக் காமின்னு சொன்னதும் ஜோல்னா பையில இருந்து பணத்தை எடுத்துக் காட்டுறார் ரஜினி. அதுக்குப் பிறகு தான் சப்ளையே பண்ணினாங்களாம்.

இவரு ஒரு பரதேசி. சன்னியாசி. பிச்சைக்காரன்னு நினைச்சாங்களாம். கடைசியா ஒரு சப்ளையர் பார்க்கும்போது இவன் நம்மைக் கண்டுபிடிச்சிட்டான்னு நினைச்சி தலையைக் குனிந்துகிட்டு சிரிச்சாராம். அதாவது உருவத்துக்கு நடந்துக்கிறதுக்கும் சம்பந்தமே இல்லையாம். இந்த சம்பவத்தை விசி.குகநாதனிடம் சொல்லி குழந்தை மாதிரி சிரிச்சி சிரிச்சி நடிச்சிக் காட்டுனாராம் ரஜினி. எவ்வளவு பெரிய ஏக்கம் ஒரு மனுஷனுக்குன்னு பாருங்க என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v