தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களாலும் மிகவும் கொண்டாடப்படும் நடிகர் ராம்சரண். அவர் தற்போது அவருடைய 16வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு பெடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை புஜ்ஜி பாபு சனா இயக்குகிறார். உப்பேனா என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த இயக்குனர் என்ற விருதை பெற்றவர்தான் புஜ்ஜி பாபு. இந்தப் படம் அடுத்த வருடம் ரிலீஸ் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
திடீரென ராம்சரண் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேன்க் உடைந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி அங்கு இருந்த பொருள்கள் எல்லாம் சேதமடைந்திருக்கின்றன. இது சம்பந்தமான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து நடந்ததா? அல்லது யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பது பற்றி விசாரணை நடந்து வருகின்றது.
ஆனால் வீடியோவை பார்க்கும் போது தண்ணீரில் மூழ்கி கேமிராக்கள் கொஞ்சம் பாதிப்பாகியிருக்கும் என தெரிகிறது. வெள்ளம் போல் நீர் பெருக்கெடுத்து வருகிறது. அதில் சில பேர் அந்த தண்ணீரிலேயே தத்தளித்து வருகின்றனர். என்னதான் முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினாலும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது.
ராம்சரண் ஏற்கனவே அவருடைய படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்கவந்த போது ஒரு ரசிகை இறந்த வழக்கில் சிக்கி அந்த பிரச்சினையில் இருந்தார். இப்போது அவருடைய படப்பிடிப்பு எனும் போது இன்னும் என்னெல்லா பிரச்சினை வரப்போகிறதோ என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Kaur: கடந்த…
Vijay TVK:…
கரூரில் விஜய்…
Vijay TVK:…
SAC: சினிமாவிலும்…