Connect with us

Cinema News

அதுமட்டும் நடந்தா நான் ஓடி வருவேன்!.. தனுஷை போலவே டக்கராக பேசிய ராஷ்மிகா மந்தனா!..

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் வருகிற ஜூன் 20ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

குபேரா படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஒரு பேன் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் சவ ஊர்வலத்தின் முன் தனுஷ் நடனம் ஆடி பாடியுள்ள போய் வா நண்பா பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, சல்மான் கானுடன் நடித்து வெளியான சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்த நிலையில், அதை தொடர்ந்து குபேரா, தாமா, தீ கேர்ள் ஃப்ரண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜூனியர் NTR-இன் படத்தில் முதன்முறையாக ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் நேஷ்னல் க்ரஷ் எனவும் அழைக்கப்படும் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அதுதொடர்பாக ஓப்பன் ஸ்டேட்மெண்ட்டை இதுவரை இருவரும் வெளியிடவில்லை. கிரிக் பார்டி படத்தின் மூலம் தொடங்கிய தன் சினிமா வாழ்க்கையில் 8 வருடங்களை கடந்ததற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நடைப்பெற்ற குபேரா இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராஷ்மிகா மந்தனா, ரொம்ப நன்றி எனக்கு இவ்ளோ சப்போர்ட் பண்றதுக்கு, எந்த மொழியாக இருந்தாலும் சரி நல்ல ஸ்க்ரிப்ட் வந்தா கண்டிப்பா அந்த படத்த பண்ணுவேன், எனக்கு எல்லா மொழியும் ஒன்று தான் நல்ல ஸ்கிரிப்ட் தான் முக்கியம். தமிழில் நல்ல கதைகள் தேடி வந்தால், நான் ஓடி வந்துவிடுவேன் என்றார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top