Categories: Cinema News latest news

தனுஷுடன் அந்த மாதிரி படத்தில் நடிக்கணும்.. ராஷ்மிகாவின் ஆசைய பாருங்க

தனுஷ் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் குபேரா. ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் திரைப்படமாக குபேரா அமைந்துள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ராஷ்மிகா தனுஷ் உடன் முதன் முறையாக இணைந்து இருக்கிறார். இவர்களுடன் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .வரும் இருபதாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கின்றது. படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் நடித்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் பிரீ புக்கிங் சில நாட்களுக்கு முன்புதான் துவங்கியது.

உலக அளவில் பிரீ புக்கிங்கில் மட்டுமே ஒரு கோடிக்கும் மேல் இந்த படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 4000 திரைகளில் இந்த படம் வெளியிடப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 120 கோடி என சொல்லப்படுகிறது. மொத்த பட்ஜெட் 100 கோடி என்றும் விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன்களுக்கான செலவு 20 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா தனுஷை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். இதில் தனுஷுடன் இணைந்து ஒரு முழு காதல் கதையில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக தனுஷிடமே நேரடியாக கூறியிருந்தார் ராஷ்மிகா. உங்களுக்கு சம்மதமா என்றும் கேட்க அதற்கு தனுஷிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறது. அதனால் கூடிய சீக்கிரம் தனுஷ் ராஸ்மிகா காம்போவில் ஒரு முழு நீள காதல் கதையை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்