Connect with us

Cinema News

இதுதான் ஒளிமயமான எதிர்காலமா? குத்துவிளக்கா இருந்த புள்ள ரட்சிதா..கடைசில இப்படி ஆயிருச்சே

சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரட்சிதாவை சொல்லலாம். அந்தளவுக்கு சீரியலில் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார் ரட்சிதா. அந்த சீரியலின் வெற்றி அடுத்ததாக ஜீ திரையில் ஒளிபரப்பான தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

அதன் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை, கணவருடனான விவாகரத்து பிரச்சினை என நீதிமன்றம் வரை இவருடைய வழக்கு சென்றது. இதற்கிடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தொடரிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ரட்சிதாவை பின் தொடர்ந்தது பெரியளவில் பேசப்பட்டது.

இருவரை பற்றி கிசுகிசுக்களாக பத்திரிக்கைகளில் எழுத தொடங்கினர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்கும் வாய்ப்பு ரட்சிதாவுக்கு வர படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார் ரட்சிதா. கனனட மொழியில் ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகு ஃபயர் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் பாலாஜி முருகதாஸும் ரட்சிதாவும் சில காட்சிகளில் மிகவும் நெருக்கமாக நடித்தார்கள்.

அது பெரியளவில் பேசு பொருளாக மாறியது. ஆனால் அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் ரட்சிதாவின் பேரும் டேமேஜ் ஆனது. இனிமேல் அந்த மாதிரி கதைகள் வந்தால் நடிக்க மாட்டேன் என்ற முடிவுக்கு வந்தார் ரட்சிதா. இப்போது சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் கமிட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறாராம்.

ratchitha

ratchitha

ரட்சிதா என்றாலே அந்த சிரிப்பு, அழகான குடும்ப பாங்கான முகத்தோற்றம் இதுதான் நியாபகத்துக்கு வரும். ஒரு குத்துவிளக்கு போல இருக்கிறார் என்றுதான் அவரை பார்த்ததும் சொல்ல தோன்றும். ஆனால் சமீபகாலமாக அவர் ஷேர் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் என பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அதில் ஒருவர் ரட்சிதாவின் புகைப்படத்தை பதிவிட்டு அவருடைய ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top