Categories: Cinema News latest news

16 வருட போராட்டம்… சுதந்திரமாக செயல்பட முடியவில்லை… ரவி மோகன் ஆதங்கம்

ஜெயம் ரவி தற்போது ஆர்த்தியைப் பிரிந்து கெனிஷாவுடன் சுற்றி வருகிறார். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் போய்க் கொண்டு இருக்க இவர்கள் மீண்டும் இணைய சான்ஸே இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானது. கெனிஷா தான் தன் அழகான துணை என இன்று பரபரப்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் ரவிமோகன். அதைப் பார்க்கும்போது எவ்வளவு மன அழுத்தத்தில் ரவிமோகன் இருந்து இருப்பார் என உணர முடிகிறது. ஜெயம் ரவி, ஆர்த்தியின் பிரிவுக்கு முக்கிய காரணங்களை ரவிமோகன் தற்போது தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க…

சமூக ஊடகக் கணக்குகள், வங்கி கணக்குகள், வீடுகள், கார்கள், வாகனங்கள் என எதையுமே தன்னால் சுதந்திரமாக செயல்படுத்த முடியவில்லை. தான் சுதந்திரமாக தன் பெற்றோர்களையும், மகன்களையும் கூட உறவுகளைச் சொல்லிச் செயல்பட முடியவில்லை. தன்னுடன் திரை உலகில் உள்ளவர்களுக்கே இதுபற்றிய உண்மை தெரியும்.

திரைக்குப் பின்னால் பல வருடங்களாக அமைதியான சண்டைகளையும், இரக்கமற்ற சூழ்ச்சிகளையும் தான் எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்பே பல கோடி கடனுக்குத் தன்னை ஜாமீனாக கையெழுத்து போட ஆர்த்தியின் அம்மா வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

5வருடங்களாக என் பெற்றோருக்கு 5 பைசா கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். 10 நாள்களுக்கு முன்பு அவரது அம்மா என்னை நடிக்கவும் அவரது கடனுக்கு நான் கொடுத்த ஜாமீனை ஈடு செய்யவும் என்னைக் கட்டாயப்படுத்தினார். பொன் முட்டையிடும் வாத்தாக என் மனைவி என்னைப் பயன்படுத்தினார். என்னை கணவராக மதிக்கவில்லை.

அவர்களுக்கு பணம், ஜாமீன், கையொப்பங்களுக்கு மட்டும் ரவி மோகன் தேவை. ஆனால் கடந்த 16 ஆண்டுகளாக நான் போராடி வாழ்ந்த வாழ்க்கை இதுதான். நான் எந்த நேரத்திலும் ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தன் சினிமா வாழ்க்கையிலும் முழுமையாக தலையிட்டு என்னை சுதந்திரமாக செயல்பட விடவில்லை.

மகன்களைப் பற்றி விசாரிப்பதற்குக் கூட என்னை அனுமதிப்பதில்லை. மகன்களின் நலனுக்காக நான் சிறப்பாக செயல்படுவேன். மௌனத்திற்கும் வரம்புகள் உண்டு என்றும் ரவிமோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v