தமிழ் சினிமாவில் ஒரு அறியப்படும் நடிகராக இருப்பவர் ரவி மோகன். சமீபகாலமாக தன்னுடைய மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து பிரச்சனை தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரு மகன்கள் இருக்கும் நிலையில் தன்னுடைய மனைவியை பிரிய போவதாக ரவி மோகன் அறிவித்தார். அதிலிருந்து ஆர்த்தி தரப்பிலிருந்தும் ரவி மோகன் தரப்பில் இருந்தும் மாறி மாறி அறிக்கைகள் பறந்தன .
காலப்போக்கில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி அறிக்கைகளில் அவதூறு கருத்துக்களையும் பரப்பி வந்தனர். இதனால் நீதிமன்றம் இனிமேல் அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்று இருவருக்குமே தடை விதித்தது. அதிலிருந்து வக்கீல் நோட்டீஸ் மூலமாக தன்னுடைய தரப்பு நியாயங்களை கூறி வருகின்றனர். இப்படி திருமண வாழ்க்கையில் பிரச்சனை போய்க்கொண்டிருக்க ரவி மோகனின் சினிமா கரியரிலும் தற்போது ஒரு புது பிரச்சனை ஆரம்பமாகி இருக்கிறது.
தற்போது கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். அந்தப் படத்திற்கு பைனான்ஸ் செய்தவர் ரத்தீஷ் என்ற ஒருவர் .இவரை ஏற்கனவே அமலாக்கத் துறையினர் தேடி வருகின்றனர். அதனால் இவர் வெளிநாட்டில் தற்போது தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு பட நிறுவனத்திற்கு ரத்தீஷ் தான் பைனான்ஸ் செய்திருக்கிறாராம்.
அதனால் அமலாக்கத் துறையினர் இவர் யாருக்கெல்லாம் பணம் கொடுத்திருக்கிறார் என்பது பற்றி ஒரு பெரிய லிஸ்ட்டை எடுத்து வைத்திருக்கிறார்களாம். அதன் அடிப்படையில் இவர் கொடுத்தது வாங்கியது என அனைவரையும் தன்னுடைய விசாரணை பிடியில் எடுக்கப் போவதாக அமலாக்கத் துறையினர் கூறி வருகின்றார்களாம்.
ravimohan
அதனால் கராத்தே பாபு படத்திற்கும் தற்போது சிக்கல் வந்திருக்கிறது. ஒரு வேளை வேறொரு தயாரிப்பாளரை நான் பார்த்துக்கொள்கிறேன் என ரவி மோகன் போனால் ஒழிய இந்த படம் தப்பிக்கும். அப்படி இல்லை என்றால் பராசக்தி இட்லி கடை போன்ற படத்தின் நிலைமைதான் கராத்தே பாபு படத்திற்கும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி அடிபட்டு வருகின்றது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…