தற்போது ரவி மோகன் ஆர்த்தி அவரது அம்மா சுஜாதா இவர்களுக்கு எதிராக ஒரு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார். இதுவரை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள அவதூறு கருத்துக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அவர்களை சார்ந்த திரைப்பிரபலங்கள் எப்படியாவது ரவிமோகனும் ஆர்த்தியும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். அதற்கு காரணம் ஆரம்பத்தில் இருந்து இவர்கள் கெமிஸ்ட்ரி பலரையும் ஈர்த்திருக்கிறது. ரவிமோகன் ஆர்த்தி சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி அனைவருக்கும் ஒரு சந்தோஷத்தைத்தான் கொடுத்திருக்கின்றது.
இப்படி ஒரு கணவன் மனைவியா? இருவருக்குள்ளும் நல்ல ஒரு புரிதல் ஹீரோயினே தோற்கும் அளவுக்கு ஆர்த்தியின் அழகு என மற்றவர்களுக்கு பொறாமை படும் அளவுக்குத்தான் இவர்களின் ஜோடி இருந்திருக்கின்றது. ஆனால் திடீரென விவாகரத்து வேண்டும் என ரவி மோகன் நீதிமன்றம் படி ஏறியது அனைவருக்குக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ரவி மோகனை பற்றி ஆர்த்தி பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
ஆரம்பத்தில் மௌனமாக இருந்த ஆர்த்தி ரவி மோகனும் கெனிஷாவும் எப்போது கை கோர்த்த படி ஒன்றாக வந்தார்களோ அதிலிருந்தே பொங்கி எழுந்துவிட்டார். அதன்பிறகுதான் அவருடைய அறிக்கையில் ரவி மோகன் பற்றி பல விஷயங்களை பகிர்ந்தார். கூடவே ரவி மோகனின் மாமியாரும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதிலும் ரவிமோகன் குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார்.
ravimohan
இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்னும் 24 மணி நேரத்தில் அந்த அவதூறு கருத்துக்களை கண்டிப்பாக நீக்க வேண்டும் என ரவி மோகன் ஆர்த்தி மீதும் மாமியார் சுஜாதா மீதும் நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்திருக்கிறார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…