தமிழ்சினிமா உலகில் இப்போது காமெடிக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதாக சொல்றாங்க. அதனாலதான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானாலும் கூட மதகஜராஜா படம் சும்மா பட்டையைக் கிளப்பி வருகிறது. பொங்கல் ரேஸில் வின்னர் இந்தப் படம்தான். காமெடி நடிகர் சந்தானம் படத்தில் வரும்போதெல்லாம் காமெடி சரவெடிதான்.
சூரி, யோகிபாபு காமெடி: அதன்பிறகு யாரும் சொல்லிக் கொள்ளும் படி காமெடியில் ஜொலிக்க வில்லை என்றே சொல்லலாம். சூரி கொஞ்சம் தப்பு தப்பா இங்கிலீஷ் பேசி காமெடி செய்தார். அதுவும் அலுத்துவிட்டதால் அவர் ஹீரோவாக நடிக்கப் போய்விட்டார். அதன்பிறகு யோகிபாபு. இவருக்கு தலைமுடிதான் பிளஸ்.
அப்பாவித்தனம்: வேறு எதுவும் காமெடியில் பெரிதாக ஜொலிக்கவில்லை. தொடர்ந்து வந்த ரெடின்கிங்ஸ்லியின் காமெடி எப்படின்னா அப்பாவித்தனம், ஆனா வேகம். இந்த பார்முலாவைக் கொண்டு வந்துள்ளார்.
இதுவும் ஒருகட்டத்தில் போர் அடித்து விடும். அதனால்தான் இப்போது அவரே தன்னோட காமெடிக்கு ரோல் மாடல் பழைய நகைச்சுவை ஜாம்பவானான நாகேஷ் என்று தெரியப்படுத்தியுள்ளளார். அவரைப் பற்றி என்னென்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…
நாகேஷ்: என் வீட்டிலும் பொண்ணுங்க இருக்காங்க. பெண்களுக்கும் என் காமெடி பிடிச்சிருக்கு. அதனால அவங்க முகம் சுளிக்கிற மாதிரியோ, டபுள் மீனிங் காமெடியிலோ நான் நடிக்கவே மாட்டேன். நாகேஷ் சாரெல்லாம் எவ்ளோ பெரிய ஜீனியஸ்.
அவர் எல்லாம் அந்த மாதிரி பேசியதே இல்ல. அந்த மாதிரி பெயர் எடுக்கணும்னு நினைக்கிறேன் என்கிறார் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
அசைக்க முடியாத காமெடி நடிகர்: தமிழ்த்திரை உலகில் அசைக்க முடியாத காமெடி நடிகராக இருந்தவர் நாகேஷ். இவர் படத்தில் வந்து நின்றாலே போதும். காமெடிதான். இவரது உடல்மொழியும், பேசும் டயலாக்கும் நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்து விடும். இயக்குனர் சிகரம் பாலசந்தரின் பிடித்த நடிகர் இவர்தான்.
இவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்லியே கமல், ரஜினி இருவரையும் வெறுப்பேற்றுவாராம். நாகேஷின் நகைச்சுவை நடிப்புக்கு தருமியாக நடித்த அந்த ஒரு வேடம் போதும். அவர் பெருமைகளைச் சொல்ல. மனுஷன் அசத்தி இருப்பார். அவரைப் போல நடிகர்கள் அதன்பிறகு யாருமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…