Categories: Cinema News latest news

ரெட்ரோ படம் எதிர்பார்த்த லாபமே இல்லங்கறாங்க… ஆனா எப்படி இவ்ளோ வசூல்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வெளியாகி இன்றுடன் 10வது நாள் ஆகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்தப் படத்தில் சூர்யா கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். படத்திற்கு முதலில் பாசிடிவ், அடுத்து நெகடிவ் என விமர்சனங்கள் மாறி மாறி வந்தன. ஆனாலும் படம் இன்று வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

படத்தின் வசூலைப் பொருத்தவரை உலகளவில் 104 கோடியைத் தாண்டியுள்ளது என 2டி நிறுவனமே அறிவித்துள்ளது. படத்தின் சக்சஸ் மீட் கூட நடந்து விட்டது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

படம் எதிர்பார்த்த அளவு வெற்றி இல்ல. ஆனா அவங்க வெற்றிப்படம்னு சொல்றாங்க. நேத்து கூட சூர்யா படத்தோட லாபத்துல இருந்து 10 கோடியை எடுத்து அகரம் பவுண்டேஷனுக்குக் கொடுத்தாரு. ஆனா அவரு ஒவ்வொரு வருஷமும் தன்னோட சம்பளத்துல இருந்து 5 கோடி கொடுப்பாங்க. இந்தத் தடவை 10 கோடி கொடுத்துருக்காரு.

இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரல. படத்தோட நீளம் ஒரு காரணம். ஆனா அவங்க சொல்ற மாதிரி மாபெரும் வெற்றி அல்லன்னு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்கிறார்.

அதே நேரம் சேக்நில்க் அறிக்கையின்படி கடந்த 9 நாள்களாக ரெட்ரோ படத்தின் வசூல் நிலவரம் என்னன்னு பாருங்க. இந்திய அளவில் படத்தின் 8 நாள் வசூல் 52.77கோடியாக இருந்தது. இந்த நிலையில் படத்தின் 9வது நாள் வசூல் 1.35 கோடி. ஆக மொத்தம் 54.2கோடியாக உள்ளது. இன்னும் இந்த வசூல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. படம் லாஸ். லாபமே இல்லன்னு சொல்றாங்க. ஆனா எப்படி இவ்ளோ வசூல் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v