Connect with us

Cinema News

பாட்டு பிடிக்கலன்னு சொன்ன இயக்குனர்!.. தூக்கி எறிந்த இளையராஜா.. வந்ததோ சூப்பர் ஹிட் மெலடி!..

Ilayaraja: இளையராஜாவுக்கு 80களில் துவங்கிய இசைப்பயணம் இன்னமும் நிற்கவில்லை. இன்னமும் மனதை மயக்கும் சூப்பர் மெலடி பாடல்களை கொடுத்து லைம் லைட்டில் இருக்கிறார். சினிமாவில் இசையமப்பது மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சி நடத்துவது, சிம்பொனி இசையமைப்பது என ஆக்டிவாக இருக்கிறார்.

சினிமா இசையை பொறுத்தவரை படத்தில் என்ன மாதிரியான சூழ்நிலையில் பாடல் வருகிறது என இயக்குனர் இளையராஜாவிடம் சொல்லுவார். இளையராஜா அதற்கு ஒரு டியூனை போட்டு காட்டுவார். அந்த டியூன் இயக்குனருக்கு பிடித்திருந்தால் அது பாடலாக மாறும். சில சமயம் இயக்குனருக்கு குழப்பம் இருந்தாலும் இளையராஜாவே அதை தீர்த்தும் வைப்பார்.

அவதாரம் : நாசர் அவதாரம் என்கிற படத்தை இயக்கி நடித்தபோது ஒரு பாடலுக்காக இளையராஜாவிடம் போனார். இளையராஜா டியூனை வாசித்து காட்டியதும் நாசருக்கு அது பிடிக்கவில்லை. இதை இளையராஜாவிடம் சொல்ல அவர் சிரித்துக்கொண்டே ‘இது நல்ல ட்யூன். சரியா வரும். நீ போய்ட்டு அப்புறம் வா’ என சொல்லி அனுப்பிவிட்டார்.

நாசர் திரும்பி வந்தபோது முழு இசைக்கோர்வோடு அந்த பாடலை கேட்டபோது மிரண்டு போய்விட்டாராம். அதுதான் ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல’ பாடலாகும். இப்படி பல இயக்குனர்களும் நடந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் சின்னக்கவுண்டர், எஜமான், சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ஆர்.வி.உதயகுமார்.

சின்னக்கவுண்டர்: இவரின் படங்களில் பாடல்கள் அற்புதமான மெலடிகளாக அமைந்திருக்கும் அதேபோல், இவர் இயக்கும் படங்களில் பாடல்களை அவரே எழுதிவிடுவார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘சின்னக்கவுண்ட படம் உருவானபோது இளையராஜா ஒரு டியூன் போட்டிருந்தார். நான் ரெக்கார்டிங் தியேட்டருக்கு போன போது அதை வாசித்து காட்டினார். எனக்கு அது பிடிக்கவில்லை என அவரிடம் சொன்னேன். கோபத்தில் கையில் நோட்ஸ் எழுதி வைத்திருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு ‘ஏன் பிடிக்கல?’ என கேட்டார்.

‘சார். நீங்க மணிரத்னம் படத்துக்கு ஏத்த மாதிரி டியூன் போட்டிருக்கீங்க. இது கிராமத்து படம் எனக்கு முத்துமணி, கண்ணுமணி இப்படி பாட்டு வேண்டும்’ என்றேன். உடனே ஆர்மோனியத்தில் ஒரு டியூன் போட்டார். அவர் வாசிக்க வாசிக்க நான் பாடல் வரிகளை எழுதினேன். அதுதான் ‘முத்துமணி மாலை’ பாடல். 5 நிமிடத்தில் உருவான பாடல் அது’ என சொல்லி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஆர்.வி.உதயகுமார்.

Continue Reading

More in Cinema News

To Top