Connect with us

Cinema News

சோஷியல் மீடியா ஓப்பன் டாய்லெட் மாதிரி ஆயிடுச்சி!.. கொந்தளித்த சமுத்திரக்கனி!…

தமிழ் சினிமாவில் நல்ல கருத்துள்ள, சமூகத்தின் அவலங்களை தோலுறுத்திக் காட்டுவது போலவும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்வது போலவும் சிறந்த படங்களை இயக்கி வந்தவர் சமுத்திரக்கனி. சசிக்குமாரின் நெருங்கிய நண்பரான இவர் சசியை வைத்து இயக்கிய நாடோடிகள், போராளி போன்ற படங்கள் பேசப்பட்டது.

மேலும், சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா போன்ற படங்கள் ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லோருக்கும் காட்டியது. எந்த படத்தில் நடித்தாலும் எல்லோருக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார் சமுத்திரக்கனி. ஒருகட்டத்தில் இது ரசிகர்களுக்கு போரடித்துவிட்டது. எனவே, அவர் நடித்த படங்கள் தியேட்டர்களில் ஓடவில்லை. அதோடு, அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு தியேட்டர்கள் கூட கிடைப்பது இல்லை. அதோடு இவரை பூமர் என ஒதுக்கிவிட்டார்கள். எனவே, ‘போங்காடா’ என சொல்லிவிட்டு சினிமாவில் நடிக்கப்போய்விட்டார்.

இப்போது தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகராக மாறிவிட்டார். குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் பெரிய படங்களிலும் சமுத்திரக்கனி இருக்கிறார். ராஜமவுலி, ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி மக்கள் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது பற்றி பேசியிருக்கிறார். கொஞ்ச நாளாகவே போன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கு. நான் காலையில் அரை மணி நேரம் போன் பார்ப்பேன். அதுகூட யாரிடமாவது பேசுவதற்காக மட்டுமே. அடுத்து மாலை அதேபோல் அரைமணி நேரம் போனை பயன்படுத்துவேன்.

அதுவும் முக்கியமான விஷயங்கள் பேச மட்டுமே. இல்லன்னா போனை எடுக்கவே மாட்டேன். சோசியல் மீடிய இப்போது திறந்தவெளி கழிப்பறை மாதிரி ஆயிடுச்சு. எல்லாவரும் வந்து அங்கே குப்பையை கொட்டிவிட்டு போகிறார்கள். அதை பலரும் மண்டையில் ஏற்றி கிறுக்கு பிடித்தவர் போல் மாறிவிடுகிறார்கள்.

சோசியல் மீடியாவில் நம்மை சீர்படுத்தும் விஷயங்கள் 10 சதவீதம் மட்டுமே இருக்கிறது. 90 சதவீதம் நம்மை சீரழிக்கும் விஷயங்களே இருக்கிறது’ என பொங்கியிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top