Connect with us

Cinema News

ராயன் ரிலிஸாகி 2-வது நாள்.. இது காதல் இல்லனா வேறேன்ன.. சமுத்திரகனி பெருமிதம்..!

நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தற்போது சினிமாவில் படு பிஸியாக நடித்த வருகின்றார். ஒரு பக்கம் தன்னுடைய படங்கள், மற்றொரு பக்கம், மற்ற இயக்குனர்களின் படங்கள் என்று படு பிஸியாக இருந்து வருகின்றார். இவரது இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் பவர் பாண்டி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கடைசியாக 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில் அடுத்ததாக நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை தானே இயக்கி தயாரித்திருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தில் தனுசுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், சமுத்திரகனி, ராஜ்கிரண், சத்யராஜ் நடித்த பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

மேலும் இப்பொழுது இசையமைக்கின்ற படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிய நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. தற்போது படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றது. நடிகர் தனுஷ் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சமுத்திரக்கனி பேசியிருந்தார்.

திரு மாணிக்கம் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல்வேறு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கும் சமுத்திரக்கனி நடிகர் தனுஷ் குறித்து பெருமையாக பேசி இருக்கின்றார். அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது ‘தம்பி தனுஷ் ராயன் படம் வெள்ளிக்கிழமை ரிலீஸானதும் திங்கட்கிழமை எனை அழைத்து அண்ணன் ரெடியா இருங்க. அடுத்த 10 நாளில் படப்பிடிப்புக்கு போறோம் கால்சீட் கொடுத்துடுங்க ஆமா’ என்று கூறினார்.

உடனடியாக அடுத்த படம் கதையைக் கேளுங்கள் என்று இட்லி கடை கதையை சொல்லிட்டு அடுத்த 10வது நாள் தேனி சூட்டிங்கில் இருந்தோம். இதெல்லாம் தனுஷுக்கு நடிப்பின் மீது இருக்கும் காதல் இன்றி வேறென்ன.. என்று கூறியிருந்தார். இவர் தனுஷுடன் இணைந்து ஏற்கனவே விஐபி 1, விஐபி 2, வாத்தி போன்ற பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top