Connect with us

Cinema News

திரிஷா அப்பவே எப்படி இருந்தாங்கன்னு தெரியுமா? கிளாஸ்மேட் பகிர்ந்த தகவல்… அட அவங்களா..!

தமிழ்சினிமா உலகில் தடம்பதித்து 22 ஆண்டுகளாக வெற்றி நடைபோட்டு வரும் கதாநாயகி யார் என்றால் இப்போது ‘டக்’கென்று சொல்லி விடுவீர்கள். திரிஷா தான் என்று. ஏன் என்றால் இப்போது அந்த செய்தி தான் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. சூர்யா 45 படவிழாவில் திரிஷா 22 ஆண்டு திரையுலகப் பயணத்திற்காக கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

இவர் 1999ல் ஜோடி படத்தில் துணை நடிகையாக நடித்தார். அதே ஆண்டு தான் சென்னை அழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து அசத்தினார். இவர் விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, கமல், ரஜினி, சிம்பு என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

ponniyin selvan

ponniyin selvan

இவரது நடிப்பில் சாமி, கில்லி, விண்ணைத் தாண்டி வருவாயா படங்கள் சூப்பர்ஹிட். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா அழகு தேவதையாக ஜொலிப்பாள். எப்பேர்ப்பட்ட அழகு என்று வியக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.

முதல் படத்தில் நடித்த மாதிரி தான் இப்போதும் இருக்கிறார் என்று பலரும் இவரைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். அந்த அளவுக்கு உடலை ஸ்லிம்மாகக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். 41 வயதாகும் இவரைப் பார்த்தால் அப்படி தெரியவே இல்லை.

இன்னும் என்ன காரணத்தினாலோ மணமாகாமல் இருக்கிறார். திரிஷாவுடன் இணைந்து பால்ய பருவத்தில் படித்தவர் யார் என்றால் ஆச்சரியமாக உள்ளது. அது பாக்கியராஜின் மகள் சரண்யா. அட இவ்ளோ நாளா தெரியாமப் போச்சே என்கிறீர்களா? இன்னும் பல ஆச்சரியங்களை அந்த கிளாஸ்மேட்டே அவிழ்த்து விடுகிறார். வாங்க பார்க்கலாம்.

திரிஷா எனக்கு ரொம்ப க்ளோஸ். சின்ன வயதில் இருந்தே நாங்க ப்ரண்ட்ஸ். இண்டஸ்ட்ரில எனக்கு முதல் ப்ரண்ட் என்று நினைக்கிறேன். நாங்க பாலே கிளாசுல ஒண்ணா இருந்தோம். என்னுடைய 3 வயதில் அங்கு சேர்த்தாங்க.

saranya

saranya

திரிஷாவும் அந்த கிளாசுக்கு வந்தாங்க. இப்ப கூட அன்னைக்கு பார்த்த மாதிரியே என் கூட பேசுவாங்க. என்னை சரண்யா என்று கூப்பிடாம என்னோட பெட் நேம் வச்சு அமுலுன்னு கூப்பிடுற ஒரு சில பேர்ல அவங்களும் ஒருத்தர் என்று சிலாகிக்கிறார் பாக்கியராஜ் மகள் சரண்யா.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top