Categories: Cinema News latest news

இந்த கால விஜயகாந்த் இவர்தான்! யுக பாரதி சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

நடிகர் விஜயகாந்த்: யாரும் யாரை மாதிரியும் மாறவே முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு குணம் இருக்கும். அதை அவர்கள் சரியாக வெளிப்படுத்தும் போதுதான் மற்றவர்களின் அபிமானங்களை பெறுவார்கள். அப்படித்தான் சினிமாவில் மக்களின் அன்பால் மூழ்கடிக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் அன்பு மழையில் நனைந்தவர் விஜயகாந்த் மட்டும்தான். இன்று ரஜினிக்கு ஒரு மாஸ் இருக்கலாம். ஆனால் ரஜினியை விட விஜயகாந்த்தான் மிக எளிதாக மக்களிடம் கனெக்ட் ஆக முடிந்தது.

அரசியல், சினிமா என பெரிய ஆளுமை: அதற்கு காரணம் அவர் பழகும் விதம். மக்களோடு மக்களாக ஜெல் ஆகிவிடுவார். அதனால்தான் விஜயகாந்தால் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அரசியலுக்கு வந்துவிட்டால் பெரிய நடிகர், பந்தா, மாஸ் இதையெல்லாம் விட்டுவிட வேண்டும். ஆனால் விஜயகாந்த் ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்திற்குள் தன்னை அடக்கிக் கொள்ளவில்லை.

இன்னும் அள்ளும் கூட்டம்:அண்ணனுக்கு அண்ணனாக, தம்பிக்கு தம்பியாக, மகனுக்கு மகனாக என மக்களோடு மக்களாக கை கோர்த்து நின்றார் விஜயகாந்த். அதனால்தான் அவர் மறைந்து ஒரு வருடம் ஆன நிலையிலும் அவருடைய சமாதியை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். எப்படி எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி இவர்கள் சமாதியை பார்க்க மெரினாவில் கூட்டம் கூடுகிறதோ அதை போல் விஜயகாந்த் சமாதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதிகிறது.

சசிகுமார்: அப்படி ஒரு பெயரையும் நன்மதிப்பையும் சம்பாதித்து சென்றிருக்கிறார் விஜயகாந்த். இவரை போல் இன்னும் ஒருவர் பிறந்துதான் வர வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இந்த கால விஜயகாந்த் இவர்தான் என ஒரு நடிகரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் வேறுயாருமில்லை. நடிகர் சசிகுமார்தான். அவர் கூறும் போது டி.ராஜேந்தருக்கு பிறகு விஜயகாந்துக்கு பிறகு எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் சசிகுமார்தான்.

ஏனெனில் அவர் வாய்ஸை மியூட் பண்ணி பார்க்கும் போது அது விஜயகாந்த் நடிக்கிற மாதிரியே இருக்கும். விஜயகாந்தின் நடிப்பையும் தாண்டி விஜயகாந்தின் எல்லா பண்புகளும் கொண்ட நடிகராக சசிகுமார் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த வெற்றிவேல் திரைப்படத்தில் ‘உன்ன போல ஒருத்தர நான் பார்த்ததே இல்ல’ என்ற பாடல். முதலில் பாடல் வரிகள் எழுதி கொடுக்கும் போது அந்த வரிகள் யாருக்கும் செட்டாகவில்லை.

அதன் பிறகுதான் இப்போது எல்லாரும் கேட்கும் அந்த வரிகளை எழுதிக் கொடுத்தேன். அது என் அடிமனசில் இருந்து அவரை நினைத்து எழுதிய பாடல் என யுகபாரதி கூறினார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்