Connect with us

Cinema News

மணிரத்னத்துக்கு கொக்கைன் கொடுத்த நடிகை?ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரி மானமும் போச்சு

நடிகர் ஸ்ரீகார்ந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கி இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இவர்களுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர் மூலமாகத்தான் கொக்கைன் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு படத்தில் ஸ்ரீகாந்துக்கு தர வேண்டிய 10 லட்சம் சம்பளப் பாக்கிக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் கொடுத்திருக்கிறார்.

அது நாளடைவில் ஸ்ரீகாந்த் கொக்கைனுக்கு அடிமையாகி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்துதான் அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதிலிருந்தே வேறு ஏதும் பிரபலங்கள் இதில் தொடர்பில் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு பாடகி சுசித்ராவை பின் தொடர்ந்து நிறைய ரசிகர்கள் ‘என் தலைவி அப்பவே சொன்னாங்க’ என டேக் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சுசித்ராவும் இதை பற்றி பல விஷயங்களை இப்போது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். ஆதாரம் தன்னிடம் நிறையவே இருப்பதாக கூறும் சுசித்ரா ஏதாவது ஒரு வகையில் எனக்கு இக்கட்டான சூழ் நிலை வரும் போதுதான் அதை காட்டுவேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த பரபரப்புக்கு இடையில் மணிரத்னம் பற்றியும் ஒரு பகீர் தகவலை கூறியிருக்கிறார் சுசித்ரா. அதாவது மணிரத்னத்துக்கு கொக்கைன் கொடுத்த நடிகை யார் தெரியுமா? மனிஷா கொய்ரலாதான் என்று திடுக்கிட வைத்திருக்கிறார். மனிஷா சென்னை வரும் போதெல்லாம் அவருடைய ஆண் தோழருடன் பப்புக்கு வருவாராம். அங்கு கொக்கைன் கொடுத்துவிட்டு போவாராம்.

manisha

manisha

ஆனால் மனிஷாவின் வலைக்குள் சிக்காத இரு நடிகர்கள் அர்ஜூன் மற்றும் அரவிந்த்சாமி மட்டும்தான் என்றும் சுசித்ரா சொல்லியிருக்கிறார். அவர்களுக்கும் கொக்கைன் கொடுக்கப்படும் போது திட்டிவிட்டு சென்று விட்டார்களாம். அதிலிருந்துதான் என்னவோ அரவிந்த்சாமிக்கும் மணிரத்னத்துக்கும் முட்டிக்கிச்சு என சுசித்ரா கூறினார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top