Categories: Cinema News latest news

ஓவர் சேட்டை பண்றாரே!.. மகனுடன் ட்ரை சைக்கிளில் லூட்டி செய்யும் செல்வராகவன்

ஆளுதான் பாக்குறதுக்கு ஒரு மாதிரி. ஆனால் அவரிடம் இல்லாத விஷயங்களே கிடையாது. அது தான் செல்வராகவன். தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை என்ற படத்தை எடுத்ததன் மூலம் முதன் முதலில் அறிமுகமானார் செல்வராகவன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை ,7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என அடுத்தடுத்து வெற்றி படங்களையும் கொடுத்து கொண்டு வந்தார்,

ஒரு இயக்குனராக நல்ல ஒரு படைப்பாளி என்ற ஒரு பெயரையும் வாங்கினார் செல்வராகவன். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கினார். அவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் பீஸ்ட். அந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து சாணிக்காயிதம் திரைப்படத்திலும் அவருடைய பெஸ்ட் பர்பாமன்ஸை கொடுத்து இருப்பார் செல்வராகவன்.

இயக்குனராக எத்தனையோ நடிகர்களை நடிக்க வைத்த செல்வராகவன் நடிகராகவும் ஒரு சிறந்த நடிகர் என்ற பெயரையும் வாங்கினார் .சமீபகாலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அவ்வப்போது தன்னுடைய குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களையும் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

ரசிகர்களின் ஆசையாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என செல்வராகவனிடம் அனைவரும் கேட்டு வருகின்றனர். அந்த ஐடியாவிலும் செல்வராகவன் இருக்கிறார். ஆனால் அது எப்போது எந்த நேரத்தில் ஆரம்பமாகும் என தெரியாது. இந்த நிலையில் தன்னுடைய மகனுடன் விளையாடுவது மாதிரியான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ட்ரை சைக்கிளில் பின்னாடி தன் மகனை வைத்து ஓட்டுகிறார்.

அந்த வீடியோதான் வைரலாகி வருகிறார். குழந்தையோடு குழந்தையாக மாறிவிட்டாரே செல்வராகவன் என அதை பார்க்கும் பொழுதே நம் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்